‘நான் ரோஹித் ரசிகன்’!.. ‘அவர் மேட்ச்ல இல்லைனா டிவியை ஆஃப் பண்ணிடுவேன்’.. இந்திய அணியின் முன்னாள் ‘ஸ்டார்’ ப்ளேயர் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, ரசிகர்கள் பலரும் கேப்டன் கோலியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

‘நான் ரோஹித் ரசிகன்’!.. ‘அவர் மேட்ச்ல இல்லைனா டிவியை ஆஃப் பண்ணிடுவேன்’.. இந்திய அணியின் முன்னாள் ‘ஸ்டார்’ ப்ளேயர் பரபரப்பு கருத்து..!

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 1 ரன்னில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 4 ரன்னில் அவுட்டாகினார்.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் கூட்டணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. இதில் 21 ரன்கள் எடுத்து ரிஷப் பந்த் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை இந்தியா எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

இதனை அடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஜேசன் ராய் 49 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் கோப்பையை கைப்பற்றிய நிலையில் நடந்த, முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் டி20 தொடருக்கு கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பளிக்காது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘மக்கள் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கை பார்க்கத்தான் வருகிறார்கள். நானும் ரோஹித்தின் ரசிகன் தான். போட்டியில் அவர் ஆடவில்லை என்றால் டிவியை அணைத்துவிட்டு சென்று விடுவேன். போட்டியை பார்க்கவும் பிடிக்காது’ என சேவாக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்