‘புஜாரா மட்டும் அதை பண்ணிட்டா, ஒருபக்க மீசையை எடுத்துறேன்’.. குறும்பாக ‘அஸ்வின்’ விட்ட ஓபன் சேலஞ்ச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புஜாரா மட்டும் அதை செய்துவிட்டால் தன் பாதி மீசையை  எடுத்துக் கொள்வதாக அஸ்வின் சவால் விடுத்துள்ளார்.

‘புஜாரா மட்டும் அதை பண்ணிட்டா, ஒருபக்க மீசையை எடுத்துறேன்’.. குறும்பாக ‘அஸ்வின்’ விட்ட ஓபன் சேலஞ்ச்..!

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானாலும், சுவர் போல நின்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பமான திகழ்ந்தார். அதில் பிரிஸ்பனில் நடந்த டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் மிக சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணை செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

I will take half my moustache out, Ashwin Challenges Pujara

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் அஸ்வின் தனது யூடியூப் சேனில் நேர்காணல் மேற்கொண்டார். அப்போது புஜாரா குறித்து பேசிய அஸ்வின், ‘இங்கிலாந்துக்கு எதிராக வரும் டெஸ்ட் தொடரில் மொயின் அலி, டாம் பெஸ், ஜாக் லீச் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா ஆடும்போது மேலேறி வந்து தலைக்கு மேல் தூக்கி அடித்தால் என் ஒருபக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்த சவாலை புஜாரா ஏற்கத் தயாரா?’ என குறும்பாக கேட்டார்.

I will take half my moustache out, Ashwin Challenges Pujara

இதற்கு பதிலளித்த விக்ரம் ரத்தோர், ‘நீங்கள் விடுத்திருப்பது நல்ல சவால்தான். அந்த சவாலை புஜாரா ஏற்பாரா என்று பார்ப்போம். எனக்கு தெரிந்து அவர் ஏற்க மாட்டார். நான் ஒவ்வொரு முறையும் ஸ்பின்னர்களின் தலைக்கு மேல் பந்தை தூக்கி அடிக்க அறிவுரை கூறினாலும், அதற்கு எதாவது நல்ல காரணம் சொல்லி என்னை மடக்கிவிடுவார்’ என சிரித்துக்கொண்டே கூறினார்.

I will take half my moustache out, Ashwin Challenges Pujara

டெஸ்டில் இதுவரை ஒருமுறை கூட சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை புஜாரா தூக்கி அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தற்போது நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயனை அவர் எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது.

I will take half my moustache out, Ashwin Challenges Pujara

நாதன் லயனில் ஓவரில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கிரிஸுக்குள் நின்று கிளீனாக விளையாட, புஜாரா மட்டும் இறங்கி வந்து டிபென்ஸ் ஆடினார். இதனால் பந்து ஒவ்வொரு முறையும் பேடில் பட்டு மேலேறியது. இதனை குறிப்பிட்டு பேசிய அஸ்வின், ‘லயன் பந்தை புஜாரா ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளும்போது எனக்கு ஹார்ட் பீட் எகிறியது. பந்து பேடில் பட்டதா அல்லது பேட்டில் பட்டதா என்றே தெரியவில்லை. ஆனாலும் புஜாரா லயனுக்கு எதிராக 50+ ஆவரேஜ் வைத்திருக்கிறார். லயனை எதிர்கொள்ள அவர் தனியாக பிளான் வைத்துள்ளார்’ என்று கூறினார்.

மற்ற செய்திகள்