‘இதுல சந்தேகம்னா உடனே அவர்கிட்டதான் கேட்பேன்’.. ‘டீம்ல அவர மாதிரி இருக்கணும்’.. கலீல் அகமது சொன்ன அந்த வீரர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் போல் தானும் இந்திய அணியில் நீடிக்க வேண்டும் என கலீல் அகமது விருப்பம் தெரிவித்துள்ளார்.

‘இதுல சந்தேகம்னா உடனே அவர்கிட்டதான் கேட்பேன்’.. ‘டீம்ல அவர மாதிரி இருக்கணும்’.. கலீல் அகமது சொன்ன அந்த வீரர்..?

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் விளையாடிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் தீபக் சஹார், ராகுல் சஹார் போன்ற வீரர்களும் சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை போல் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என கலீல் அகமது தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘இந்திய அணிக்காக ஜாகீர் கான் விளையாடியது போல் நானும் விளையாட ஆசைப்படுகிறேன். அவரைப் போலவே இந்திய அணியின் சொத்தாக இருக்க விரும்புகிறேன். எனக்கு எப்போதெல்லாம் பௌலிங் தொடர்பாக சந்தேகம் வருகிறதோ, உடனே நான் ஜாகீர் கானை தொடர்பு கொள்வேன். அவரும் எனக்கு அடிக்கடி ஆலோசனைகள் கூறுவார்’ என கலீல் அகமது தெரிவித்துள்ளார்.

ZAHEER KHAN, KHALEEL AHMED, TEAMINDIA