'இவர் தான் கெத்து'... 'அது மட்டும் நடக்காம இருந்திருந்தா'...'இப்ப சீனே வேற '... இந்திய வீரரை புகழ்ந்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதையடுத்து தோனி தனது ஓய்வை அறிவிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. தற்போது தோனி ஓய்வை அறிவிக்க கூடாது என ரசிகர்கள் பலரும் கருத்துகள் தெரிவித்துவருகிறர்கள். இதனிடையே ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் தோனி, அவர் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது, என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது ''நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட் ஆகவில்லை என்றால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். அவர் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்திருக்கிறார். தோனி இல்லையென்றால் இந்திய அணி பல போட்டிகளில் வென்றிருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று'' என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கோலியின் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ''கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும்தான் அவர்களின் வெற்றிக்கு காரணம்’’ என்றார்