“இந்த மாதிரி மேட்சுக்கெல்லாம் எனக்கு அதிக சம்பளம் தரணும்”.. எதுக்காக KL ராகுல் இப்படி சொன்னார்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
Also Read | அச்சோ! இது மட்டும் நடக்காம இருந்திருந்தா.. நேத்து மேட்ச்ல இவர்தான் ‘ஹைலைட்’... ரசிகர்கள் ஆதங்கம்..!
ஐபிஎல் தொடரின் நேற்றைய 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்டஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி காக் 140 ரன்களும், கே.எல்.ராகுல் 68 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டாவது அணியாக லக்னோ அணி உள்ளது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், ‘இந்த மாதிரியான போட்டிகளுக்காக எனக்கு இன்னும் கூடுதல் சம்பளம் தர வேண்டும். இப்படிப்பட்ட போட்டிகளை இந்த சீசனில் முதலில் இழந்திருந்தோம். கடைசி பந்து வரை விறுவிறுப்பாக செல்லும் போட்டிகள் குறைவு. சில போட்டிகள் கடைசி ஓவருக்கு சென்றுள்ளது, ஆனால் கடைசி பந்து வரை திரில் என்றால் இந்த போட்டிதான்’ என சிரித்துக்கொண்டே கூறினார்.
தொடர்ந்து பேசிய கே.எல்.ராகுல், ‘வெற்றி பெற்றது மகிழ்ச்சி. நடுவில் மோசமான கிரிக்கெட் ஆடிவிட்டோம், அதனால் எளிதாக தோல்வி அடைந்து மனவருத்தத்துடன் சென்றிருப்போம். சீசனின் கடைசி லீக் போட்டியை இந்த மாதிரி முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. மோசின் கான் இந்த சீசனில் எங்களுக்காக தனித்துவமாக வீசுகிறார். அவர் தனது திறமைகளை சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்துகிறார். இந்திய அணியில் விரைவில் அவர் இடம்பெறுவார் என்று நினைக்கிறேன். இந்திய அணி எப்போதும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம் உள்ளது.
இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியது. நாங்கள் பதற்றமடையவில்லை என்று கூற முடியாது, ஏனென்றால் 2 பந்தில் 3 ரன் தேவை என்று இருந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் கடைசி ஓவரில் அற்புதமாக பந்து வீசினார். ஐபிஎல் தொடரின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற வெற்றிகள் அணியை வலுப்படுத்தும், நம்பிக்கையை வளர்க்கும்’ என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்