‘என் மனைவி அதைப் பார்த்துக் கதறி அழுதார்..’ செய்தியாளரிடம் கேப்டன் உருக்கம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

‘என் மனைவி அதைப் பார்த்துக் கதறி அழுதார்..’ செய்தியாளரிடம் கேப்டன் உருக்கம்..

இந்த வெற்றிக்குப் பிறகு பல தரப்பிலிருந்தும் இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்தது. அதேசமயம் பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானார்கள். அதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தலங்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக சில ரசிகர்கள் எல்லை மீறி தனிப்பட்ட முறையில்  காட்டமான வார்த்தைகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தனது குழந்தையுடன் லண்டனில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் சர்பராஸ் செல்லும்போது வீடியோ எடுத்துக் கொண்டே ஏன் கொழுத்த பன்றி போல இருக்கிறார் எனக் கேட்டு வரம்பு மீறி நடந்துகொண்டு அந்த வீடியோவையும் பதிவிட்டிருந்தார். பலரும் அந்த ரசிகரின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்க, பின்னர் அவர் சர்பராஸ் அகமதுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுபற்றிப் பேசியுள்ள சர்பராஸ், “அந்த வீடியோ எடுக்கப்பட்டபோது எனது மகனும் கூட இருந்தது எனக்கு மிகவும் வலியை உண்டாக்கியது. அந்த வீடியோவை எடுத்த நபரும் தனது குடும்பத்துடன் இருந்ததால் நான் அவர் அதைப் பகிர மாட்டார் என நினைத்தேன். ஆனால் நான் ஹோட்டலுக்குத் திரும்பிய போது என் மனைவி அந்த வீடியோவைப் பார்த்துக் கதறி அழுதுகொண்டிருந்தார். இது ஒரு வீடியோ தான் இன்னும் சிலர் நம்மிடம் வந்து பல கருத்துக்களைக் கூறுவார்கள். இது சீரியஸ் ஆனது அல்ல. நாம் மன தைரியத்தை இழக்கக்கூடாது எனக் கூறி அவரைத் தேற்றினேன். அந்த வீடியோவிற்கு நான் கோபமாக எதிர்வினையாற்றியிருந்தால் உண்மையில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியாமலே போயிருக்கும். அந்த வீடியோ வெளியான பிறகு எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். கடைசியாக விளையாடிய போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு அதன் முதல் தோல்வியைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

ICCWORLDCUP2019, INDVSPAK