"தோனியை விமர்சிக்குறவங்கள பாத்து நான் பரிதாபப்படுறேன்.. அவர் வயசுல இப்படி ஆட முடியுமா?!" - கிரிக்கெட் பிரபலம் ‘பதிலடி!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின் ஓராண்டாக தோனி எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் 13வது ஐபிஎல் போட்டித் தொடரில், தோனியின் மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

"தோனியை விமர்சிக்குறவங்கள பாத்து நான் பரிதாபப்படுறேன்.. அவர் வயசுல இப்படி ஆட முடியுமா?!" - கிரிக்கெட் பிரபலம் ‘பதிலடி!’

ஆனால், போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக சிஎஸ்கே அணி  மோசமான் தோல்விகளை சந்தித்ததால் தோனியின் விளையாட்டு மீது அதிருப்தி அடைந்த சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தோனியை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் சாம்பியன் சிஎஸ்கே அணி 7-வது இடத்துக்குச் சென்றுவிட்டதாக காட்டமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான சையத் கிர்மானி தோனிக்கு ஆதரவாக  பேசியுள்ளார்.

“ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் உயர்வு எப்படி இயல்போ அப்படிதான் சறுக்கலும். காலமாற்றம் இயற்கை. தோனியின் திறமையைப் பற்றி இப்போது சந்தேகப்படுபவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன்.

அவர் மிகச்சிறந்த ஃபினிஷர். நீண்ட ஓய்வுக்குப் பின் ஆட வந்துள்ளார் தோனி. அதன் பாதிப்புதான் இது. எனக்குத் தெரிந்து எந்த வீரரும் தோனியின் இந்த வயதில் இவ்வளவு ஆரோக்கியமான, உடல் தகுதியுடன் விளையாடியதில்லை. தோனிக்கு இருக்கும் மனப் பக்குவமும் இருந்ததில்லை.

 'I Pity Those Who Are Criticising MS Dhoni', Says Syed Kirmani

இப்போது ஆடும் இளைஞர்களே தோனியின் உற்சாகத்துக்கு இணையாக இருப்பார்களா என்பதை சொல்ல முடியாது. எதிர்காலம் குறித்து ஒவ்வொரு வீரருக்கும் கனவுகள், எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் எல்லாம் இந்த வயதில் வெளிவரும். அதனால் பதற்றம். வெளிப்படையாக நாம் இதனை ஏற்க வேண்டும்”, என்று சையத் கிர்மானி கூறினார்.

மற்ற செய்திகள்