"'டீம்'க்கு தேவைன்னா நான் அதை செய்வேன்.." 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் 'இறுதி' போட்டிக்காக.. வேற லெவலில் திட்டம் போடும் 'ரஹானே'??.. "அப்போ கன்ஃபார்மா 'சம்பவம்' இருக்கு!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக, இரு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று காட்டுவதில், குறிக்கோளாக உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளங்கள், வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், நிச்சயம் இரு அணியிலுமுள்ள பேட்ஸ்மேன்கள், தங்களுக்கு முன்னுள்ள சவால்களை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியைப் பொறுத்துவரையில், புஜாரா, ரஹானே, கோலி, ரோஹித் ஷர்மா, ஹனுமா விஹாரி என சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயண மேற்கொண்டிருந்த இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, வரலாறு படைத்திருந்தது.
இந்த தொடரில், முதல் போட்டியுடன், இந்திய கேப்டன் கோலி இந்தியா கிளம்பியிருந்த நிலையில், இந்திய அணியை வழிநடத்திய துணை கேப்டன் ரஹானே (Rahane), மிகச் சிறப்பாக தலைமை தாங்கி, கோப்பையை வெல்ல உதவினார்.
இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும், அவர் பேட்டிங் மீதும், அணிக்கான அவரின் செயல்பாடு மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த இறுதி டெஸ்ட் போட்டி குறித்து ரஹானே மனம் திறந்துள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர், 'கேப்டன் கோலி நிறைய யோசனைகளை தலையில் வைத்துள்ளார். எனவே, நான் அவருக்கு உறுதுணையாக பின்னால் இருக்கப் போகிறேன். ஒரு துணை கேப்டனாக, எனது திட்டங்களையும் நான் தயாராக வைத்திருப்பேன். அணிக்குத் தேவை ஏற்பட்டாலோ, அல்லது கோலி என்னிடம் அது பற்றி கேட்டால் மட்டுமே, எனது திட்டத்தினை நான் வெளிப்படுத்துவேன். இல்லையெனில், நான் எதுவும் தெரிவிக்க மாட்டேன்' என்றார்.
தொடர்ந்து, பேட்டிங் பார்ட்னர்ஷிப் பற்றிப் பேசிய ரஹானே, 'கோலியும், நானும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளோம். அதே போல, நாங்கள் இருவரும் இணைந்து ஆடினால், அதிரடியாக ஆட விரும்புவோம். ஆனால், புஜாராவுடன் இணைந்து ஆடினால் வேறு மாதிரி இருக்கும். அவருடன் இணைந்து, அதிரடி காட்ட வேண்டுமென்றால், அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும்' என ரஹானே தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்