"இவருக்கு 'டீம்'ல இடம் கெடைக்குறது டவுட்டு தான்.. ட்ரெஸ்ஸிங் 'ரூம்'லயே தான் இருக்கணும்.." 'என்னடா இது 'சிஎஸ்கே' வீரருக்கு வந்த சோதனை?!!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ளதையடுத்து, அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

"இவருக்கு 'டீம்'ல இடம் கெடைக்குறது டவுட்டு தான்.. ட்ரெஸ்ஸிங் 'ரூம்'லயே தான் இருக்கணும்.." 'என்னடா இது 'சிஎஸ்கே' வீரருக்கு வந்த சோதனை?!!'

இந்த ஐபில் தொடரை, மற்ற அனைத்து வீரர்களையும் விட, அதிகமாக எதிர்பார்த்து காத்து வருவது இந்திய வீரர் புஜாரா தான். டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 வீரரான புஜாரா, கடந்த 7 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இடம்பெறவில்லை. நிதானமாக ஆடும் டெஸ்ட் வீரர், எப்படி டி 20 போட்டிகளுக்கு சரி ஆவார் என அனைத்து அணிகளும் அவரைத் தேர்வு செய்யவில்லை.

இருந்தாலும்தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற புஜாரா (Pujara) விருப்பம் காட்டி வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தனக்கு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்ததால் திக்கு முக்காடிப் போன புஜாரா, தோனியுடன் இணைந்து ஆடவுள்ளது பற்றி மகிழ்ச்சியுடன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அது மட்டுமில்லாமல், நிதானமாகவே நாம் ஆடிக் கண்ட புஜாரா, பயிற்சியில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை பறக்க விடுவதைக் கண்டு, சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா (Pragyan Ojha), புஜாரா ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

'சென்னை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் புஜாரா இருப்பாரே தவிர, ஆடும் லெவனில் அவர் இருப்பதாக நான் பார்க்கவில்லை. வேண்டுமென்றால், தொடரின் பாதியில் வேறு எதாவது வீரருக்கு பதிலாக வேண்டுமானால் புஜாரா களமிறங்கலாம். ஆனால், முதலில் இருந்தே அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. புஜாரா மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகத் திறைமையாக ஆடக் கூடியவர்.

ஆனால், டி 20 கிரிக்கெட் போட்டிகள் பற்றி நாம் பேசும் போது, அது டெஸ்ட் போட்டியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதில் ஆடும் வீரர், அதிக ஃபிட்டாக இருக்க வேண்டும். அதே போல, இதில் இருக்கும் சவால்களும் வித்தியாசமானவை. இவை எல்லாம் தான் புஜாராவுக்கு சவாலாக இருக்கப் போகிறது. மற்றபடி, புஜாரா ஆடவுள்ளது, எனக்கு மகிழ்ச்சியைத் தான் தருகிறது.

அது மட்டுமில்லாமல், 7 ஆண்டுகளுக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் புஜாராவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, இன்று பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும், இளைஞர்கள் ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்களிடத்தில் விதைக்கும்' என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்