RRR Others USA

“இந்நேரம் நான் அங்க இருந்திருக்கணும்”.. “வீட்டுல இருந்து ஐபிஎல் மேட்ச் பாக்க வேதனையா இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆதங்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் போனது வருத்தமாக உள்ளதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

“இந்நேரம் நான் அங்க இருந்திருக்கணும்”.. “வீட்டுல இருந்து ஐபிஎல் மேட்ச் பாக்க வேதனையா இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆதங்கம்..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று (31.03.2022) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருப்பது வருத்தமாக உள்ளதாக முன்னாள் சிஎஸ்கே வீரரும், இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டருமான சாம் கர்ரன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் அங்கு இல்லாததை நினைத்தால் வருத்தமாக உள்ளது. வீட்டில் இருந்து ஐபிஎல் போட்டியை பார்க்க வேதனையாக இருக்கிறது. எனக்கு அங்கு போக வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் என்னால் முடியாது. நான் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறேன். விரைவில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன்’ என சாம் கர்ரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நான் மீண்டும் வலைப் பயிற்சிக்கு திரும்பியுள்ளேன். நான் இப்போதும் துடிப்புடன்தான் இருக்கிறேன். இப்போது நினைத்தாலும் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ஆனால் அங்கு தொடர்ந்து விளையாட வேண்டி இருப்பதால் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிச்சயமாக நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வேன். ஏனென்றால் அங்கே நீங்கள் எப்போதும் கிரிக்கெட்டை சுவாசிக்க முடியும். உங்களது காலை உணவை கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாட முடியும்’ என சாம் கர்ரன் கூறியுள்ளார்.

I definitely want to go back to IPL: Ex-CSK player Sam Curran

சாம் கர்ரன், சிஎஸ்கே அணிக்காக கடந்த 2 ஆண்டுகள் விளையாடி உள்ளார். பல முக்கிய போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அப்போது நடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சாம் கர்ரன் விளையாடவில்லை.

தற்போது அவர் ஓய்வில் இருப்பதால், நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. காயம் குணமடைந்ததும், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளதாக சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

CSK, IPL, SAMCURRAN

மற்ற செய்திகள்