'சிஎஸ்கே'வை வீழ்த்த இப்டி ஒரு பிளானா??.. 'மாஸ்' திட்டம் போட்டு தயாராகும் 'ரிஷப் பண்ட்'?!.. "'கேப்டன்' ஆனதும் முதல் பாலே 'சிக்ஸர்' தான்!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டனை சில தினங்களுக்கு முன் நியமித்திருந்தது.

'சிஎஸ்கே'வை வீழ்த்த இப்டி ஒரு பிளானா??.. 'மாஸ்' திட்டம் போட்டு தயாராகும் 'ரிஷப் பண்ட்'?!.. "'கேப்டன்' ஆனதும் முதல் பாலே 'சிக்ஸர்' தான்!!"

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சீசனில் களம் கண்டிருந்த நிலையில், சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. இதிலிருந்து முழுமையாக குணமடைய இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என்பதால், அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, டெல்லி அணியின் கேப்டனாக, மற்றொரு இளம் வீரர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். டெல்லி அணி, தங்களது முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், டெல்லி அணிக்கு முதல் முறையாக கேப்டனாக செயல்படவுள்ளது பற்றி பேசிய ரிஷப் பண்ட், 'டெல்லி அணியின் கேப்டனாக என்னை தேர்ந்தெடுத்த டெல்லி அணியின் நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை கோப்பையை ஒருமுறை கூட வெல்லாத டெல்லி அணிக்கு, இந்த முறை கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக உள்ளேன்' என கூறினார்.

தொடர்ந்து, சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில், கேப்டனாக செயல்படுவது பற்றி பேசிய ரிஷப் பண்ட், 'நான் கேப்டனாக ஆடும் முதல் போட்டி தோனி பாய் அணிக்கு எதிரானது ஆகும். அவரிடம் இருந்து, நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன்.

 

அதே போல, எனது கிரிக்கெட் பயணத்திலும், ஒரு வீரராக சில அனுபவங்களைப் பெற்றுள்ளேன். தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதையும், எனது தனிப்பட்ட அனுபவத்தையும் இணைத்து, சென்னை அணிக்கு எதிராக பயன்படுத்தி பார்ப்பேன்' என தெரிவித்துள்ளார் .

 

மற்ற செய்திகள்