ரிஷப் பண்ட்டை திட்டினாரா முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்??.. நோ பால் சர்ச்சை நடுவே மைதானத்தில் நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், நிகழ்ந்த நோ பால் சர்ச்சை ஒன்று, மிகப் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

ரிஷப் பண்ட்டை திட்டினாரா முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்??.. நோ பால் சர்ச்சை நடுவே மைதானத்தில் நடந்தது என்ன??

முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 116 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த போட்டியிலும் சதமடித்திருந்த பட்லர், தொடர்ந்து இரண்டாவது சதத்தையும் அடித்துள்ளார். இந்த தொடரில், அவர் அடித்த 3 ஆவது சதம் இதுவாகும்.

மெய்டன் ஓவர்

நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவாகி உள்ளது. பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், கடைசி இரண்டு ஓவர்களுக்கு டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அப்போது, 19 ஆவது ஓவரை வீசிய பிரஷித் கிருஷ்ணா, ஒரு ரன் கூட கொடுக்காமல், அதே ஓவரில் லலித் யாதவ் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

இதனால், கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 36 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால், கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் போவல். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திடீரென மைதானத்தில் சில நிமிடங்கள் போட்டி தடைபட்டது.

நோ பால் பெயரில் வந்த பிரச்சனை

போவல் சிக்சருக்கு அடித்த மூன்றாவது பந்து, நோ பால் போல தோன்றியது. ஆனால், கள நடுவர்கள் நோ பால் கொடுக்கவில்லை. இதனால், வெளியே இருந்த டெல்லி அணியினர், ஒரு நிமிடம் கடுப்பாகினர். பார்ப்பதற்கு நோ பால் போன்றே இருந்ததால், அவர்கள் நடுவர்களிடம் வெளியே இருந்து கொண்டு முறையிட்டனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஒருவரையும் மைதானத்திற்குள் அனுப்பி வைத்தார் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் செய்த விஷயம்..

அதே போல, பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர்களை வெளியே வருமாறும் கோபத்தில் அழைத்தார் ரிஷப் பண்ட். போட்டியை நிறுத்த வேண்டிய நோக்கில், பேட்ஸ்மேன்களை வெளியே அழைத்த பண்ட்டின் செயல், கடும் விவாதத்தை கிளப்பி உள்ளது. ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. கிரிக்கெட் போட்டியில் இப்படி செய்வது முறையானது அல்ல என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஷேன் வாட்சன், பண்ட் அருகே வந்து நின்று எதையோ பேசியதாக தெரிகிறது. அதே போல, கை காட்டி எதையோ பேசி இருந்தார். தொடர்ந்து, பண்ட்டை சமாதானப்படுத்தி அவர் பின்னால் தட்டி, தேற்றவும் செய்தார் வாட்சன். இது தொடர்பான காட்சிகளும் அதிகம் வைரலாகி இருந்தது.

போட்டிக்கு பின், நோ பால் சர்ச்சை பற்றி பேசிய வாட்சன், "நடுவர்களின் முடிவு சரியோ, இல்லையோ அதனை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். போட்டிக்கு நடுவே ஒருவர் மைதானத்தில் நுழைவது சரியான ஒன்று கிடையாது" என தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….

https://www.behindwoods.com/bgm8/

RISHABHPANT, SHANE WATSON, DC VS RR, ரிஷப் பண்ட், ஷேன் வாட்சன்

மற்ற செய்திகள்