‘இதெல்லாம்மா என்கிட்ட கேட்பீங்க?’- நம்ம கே.எல்.ராகுல் கிட்ட அப்படி என்ன கேட்ருப்பாரு அந்த நிருபர்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை நவம்பர் 17-ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்குகின்றனர். முதல் போட்டி ஜெய்பூரில் நடைபெறுகிறது. இதனால், இந்திய அணி வீரர்கள் ஜெய்பூர் வந்து சேர்ந்துள்ளனர்.

‘இதெல்லாம்மா என்கிட்ட கேட்பீங்க?’- நம்ம கே.எல்.ராகுல் கிட்ட அப்படி என்ன கேட்ருப்பாரு அந்த நிருபர்?

ஜெய்பூரில் வந்திறங்கிய இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு ராகுல் அளித்த பதிலும் தற்போது வைரலாகி வருகிறது. டி20 போட்டியின் துணை கேப்டன் ஆன கே.எல்.ராகுலிடம் நிருபர் ஒருவர், “டி20 போட்டியில் பங்கேற்பதற்காக ஜெய்பூர் வந்துள்ளீர்கள். இங்கு நிலவும் காற்று மாசுபாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். இந்த மாதம் தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதற்கு பின்னர் டெல்லி, ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து உள்ளது. ஜெய்பூரில் கடந்த சனிக்கிழமை அன்று காற்றின் தரம் அதிகப்படியாக மாசு அடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்று வரையில் வானம் மாசடைந்த புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது.

how KL Rahul tackles the question of a journalist at jaipur

இந்த சூழலில் தான் காற்று மாசுபாடு குறித்து துணை கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கே.எல்.ராகுல், “சொல்வதென்றால் நாங்கள் ஜெய்பூர் வந்து இறங்கியதில் இருந்து இன்னும் வெளியே செல்லவே இல்லை. நேராக மைதானத்துக்கே வந்துவிட்டோம் என்பதால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

how KL Rahul tackles the question of a journalist at jaipur

ஆனாலும், என்னிடம் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்? காற்று மாசுபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்துச் சொல்ல என் கையில் மீட்டர் உடன் நான் சுற்றுவது இல்லை. ரொம்ப மோசமாக இருக்காது என்றே நம்புகிறேன். இங்கு நாங்கள் எல்லாரும் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம்” என பதில் அளித்தார்.

how KL Rahul tackles the question of a journalist at jaipur

டி20 உலகக்கோப்பையை விட்டு அரையிறுதிக்கு முன்னரே வெளியேறிய இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட உள்ளது. மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்திய அணி இன்று முதல் தங்களது பயிற்சியைத் தொடங்கி உள்ளனர். புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் டி20 கேப்டன் ரோகித் சர்மா உடன் அணியினர் இன்று பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர். தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

CRICKET, INDVSNZ, KL RAHUL, ROHIT SHARMA

மற்ற செய்திகள்