பாசத்துல நம்மளையே மிஞ்சிடுவாங்க போலயே.. விராட் கோலிக்கு ஹாங்காங் அணியினர் கொடுத்த ஜெர்சி.. அதுல எழுதியிருந்த விஷயம் தான் செம்ம..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு ஹாங்காங் அணியினர் ஜெர்சி ஒன்றை பரிசாக அளித்திருக்கின்றனர். இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் துவங்கியது. குரூப் ஏ வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும், குரூப் பி யில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்த்து களமிறங்கியது இந்திய அணி.
அதிரடி காட்டிய விராட் - சூரியகுமார் யாதவ்
துபாயில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. ஓப்பனர்களான ரோஹித் 21 ரன்னிலும், ராகுல் 36 ரன்னிலும் வெளியேற அடுத்து கைகோர்த்த விராட் - சூரியகுமார் யாதவ் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் கோலி 59 ரன்களும், சூரியகுமார் 68 ரங்களும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, விராட் கோலிக்கு ஹாங்காங் அணியினர் வித்தியாசமான பரிசு ஒன்றினை அளித்திருக்கின்றனர்.
அன்புப் பரிசு
ஹாங்காங் ஜெர்சியில்,"ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். இன்னும் பல அருமையான நாட்கள் உள்ளன. வலிமையுடனும் அன்புடனும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை பெற்றுக்கொண்ட விராட் கோலி நன்றியும் தெரிவித்திருக்கிறார். இந்த ஜெர்சியின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கோலி, ஹாங்காங் கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவித்தோடு இந்த செயல் மிகவு இனிமையானது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த ஜெர்சியின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | மதங்களை கடந்து ஒன்றிணைந்த மக்கள்.. களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. கர்நாடகாவில் சுவாரஸ்யம்..!
மற்ற செய்திகள்