இதுமட்டும் நடந்தா போதும் ‘அரையிறுதி’-க்கு ஈசியா போய்டலாம்.. இந்தியாவுக்கு இருக்கும் ‘கடைசி’ நம்பிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கு செல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியாவின் நெட் ரன்ரேட் (+1.619) வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் இந்தியாவை (4 புள்ளிகள்) விட நியூஸிலாந்து (6 புள்ளிகள்) முன்னிலையில் உள்ளது. மேலும் இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டியே உள்ளது.
இதனால் நம்பீயா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்து நெட் ரன்ரேட்டை மேலும் உயர்த்த வேண்டும். அதேபோல் நாளை (07.11.2021) நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து தோல்வியடைந்தால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை நியூஸிலாந்து வெற்றி பெற்றுவிட்டால், இந்தியாவின் அரையிறுதி கனவும் அவ்வளவுதான். அதனால் நியூஸிலாந்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
மற்ற செய்திகள்