ப்ளே ஆஃப்ல.. அந்த ஆலமரத்த சாய்ச்சுட்டா போதும்.. "அவருக்குனு ஒரு தனி ப்ளானே வெச்சுருக்கோம்"! - ‘ஐபிஎல்’ அணி வீரர் நம்பிக்கை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஃபார்மில் இல்லாமல் இருப்பதாகவும், அதை சாதகமாக பயன்படுத்தி டெல்லி அணியை வெல்ல உள்ளதாகவும், சீனியர் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன், கடந்த மாதம் துபாயில் துவங்கியது. இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்ததுடன், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிற அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பின்றி வெளியேறியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் குவாலிஃபயர் போட்டியில், புள்ளி பட்டியலின்படி முதல் இரண்டு இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ், மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு நேரடி தகுதி பெறுகின்றன.
இந்நிலையில் இப்போட்டி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சீனியர் வீரர் ஷிகர் தவான் பேசும்போது, “மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சிறந்த வீரர், ஆனால் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் எங்களுடன் மோதும் போட்டியில் சற்று தடுமாற வாய்ப்பு உள்ளது.
நிறைய போட்டிகளில் அவர் விளையாடாததால் அவருக்கு டச் இருக்குமா என தெரியவில்லை. ரோஹித் சர்மாவையே கொஞ்சம் தடுமாற வைத்தால், அடுத்தடுத்து வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படலாம். எனவெ அவருக்கான தனி திட்டங்களையும் வைத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்