இந்திய அணி இந்த நிலைமைக்கு வரக் காரணம்... அன்று தோனி செய்த 'அந்த' ஒரு விஷயம்!.. ரகசியத்தை உடைத்த ஆகாஷ் சோப்ரா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் கேப்டன்சி வெற்றிகரமானதாக இருந்ததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்று வரை இவரை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். தோனியின் கேப்டன்சி மீது ரசிகர்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் அவர் பெற்றுக்கொடுத்த ஐசிசி கோப்பைகள் தான்.
2007ல் ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தவர். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், தோனியின் சிறப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார். அதில், "தோனியின் கேப்டன்சியில் அணி சிறப்பாக செயல்பட்டது. இதற்கு காரணம் அவர் அணியில் எந்தவொரு மாற்றமும் பெரிதாக செய்யாதது தான். இவர் கேப்டனாக இருந்த போது எந்த ஒரு வீரரும், தான் அணியில் இருப்போமா மாட்டோமா என்ற அச்சத்தில் இருந்ததில்லை.
தொடரின் லீக் போட்டிகள் முதல் ப்ளே ஆஃப் சுற்று வரை அணியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. சிறப்பாக விளையாடி ரன் அடிக்கக்கூடிய வீரர்களே இவரின் அணியில் இருப்பார்கள். ப்ளே ஆஃப் சுற்றின் போது சிறு தவறுகள் ஏற்படும். எனினும், அணியின் ப்ளேயிங் 11ல் எந்த மாற்றமும் ஏற்படாது. அவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார்.
தோனி தலைமையின் கீழ் ஒவ்வொரு தொடரிலும் யாரேனும் ஒருவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வென்று கொடுப்பார்கள். அதுதான் அணிக்காக தோனி செய்த பெரிய விஷயம். 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்த்துக்கொண்டால் கவுதம் கம்பீர் பெரிய இன்னிங்ஸை ஆடினார். 2011 உலகக்கோப்பையில் யுவ்ராஜ் சிங் மற்றும் தோனி இணைந்து அசத்தினர். 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அனைவரும் சிறப்பாக ஆடினர். இதனால் தான் பல முன்னணி வீரர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள்" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்