பரபரப்பாக நடந்து முடிந்த 'மேட்ச்'.. அதுக்கு நடுவுல வைரலான அந்த ஒரு 'Hashtag'... "இதுக்கு தானே இவ்ளோ நாள் காத்து இருந்தோம்..." கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டி 20 போட்டி, இன்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

பரபரப்பாக நடந்து முடிந்த 'மேட்ச்'.. அதுக்கு நடுவுல வைரலான அந்த ஒரு 'Hashtag'... "இதுக்கு தானே இவ்ளோ நாள் காத்து இருந்தோம்..." கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'!!

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும், இடையே சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், அந்த அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 - 2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனிடையே, இந்த டி 20 போட்டி தொடர்பாக ஒரு அதிரடி ஹேஸ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

hashtag about virat and kohli partnership trending on twitter

முன்னதாக, இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்காத ரோஹித் ஷர்மா, மூன்றாவது போட்டியில் இருந்து தொடர்ந்து ஆடி வருகிறார். இஷான் கிஷான், ஷிகர் தவான், கே எல் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் மாறி மாறி, தொடக்க வீரர்களாக இந்திய அணிக்கு களமிறங்கி வந்த நிலையில், இன்றைய போட்டியில் ரோஹித்தை தவிர மற்ற மூன்று பேரும் ஆடவில்லை.

hashtag about virat and kohli partnership trending on twitter

இதனால், ரோஹித்துடன் இணைந்து, கேப்டன் கோலி இன்னிங்ஸை தொடங்கினார். இருவரும் மாறி, மாறி பந்துகளை சிதறடித்தனர். ரோஹித் ஷர்மா 64 ரன்களும், விராட் கோலி 80 ரன்களும் எடுத்த நிலையில், பல நாட்களுக்கு பிறகு இந்த அதிரடி வீரர்கள் இணைந்து களமிறங்கி அசத்தியதை ட்விட்டரில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

hashtag about virat and kohli partnership trending on twitter

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது ட்வீட்டில், சச்சின், சேவாக் இணையை பார்ப்பது போல உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதே போல, சேவாக், வாசிம் ஜாஃபர், லக்ஷ்மண் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் இந்த இணையை பாராட்டி வருகின்றனர்.

 

அதே போல, இனிவரும் போட்டிகளில், ரோஹித் -  கோலி ஆகியோர் இணைந்து தொடக்க வீரர்களாக ஆட வேண்டும் என ரசிகர்களும் ட்விட்டரில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், #Rohirat என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

மற்ற செய்திகள்