VIDEO: 'நிப்பாட்டுங்க சார்'!.. 'அவங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா'?.. அம்பயருடன் கோலி செம்ம சண்டை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து பேட்ஸ்மேன் செய்த தவறை தட்டிக்கேட்பதற்காக கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: 'நிப்பாட்டுங்க சார்'!.. 'அவங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா'?.. அம்பயருடன் கோலி செம்ம சண்டை!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பிறகு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இதற்கிடையே, 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணி வீரர்களுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா - ஆண்டர்சனுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, 3வது டெஸ்டில் அணி பிரச்சினையாக உருவெடுத்தது. எனவே, 4வது போட்டியில் இரு அணிகளும் எந்தவித சண்டையும் இன்றி அமைதியான முறையில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து வீரர் செய்த விஷயம் ஒன்று மீண்டும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

  

முதல் நாள் ஆட்டத்தின் போதே இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து, பின்னர் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்டத்தின் 7வது ஓவரின் போது இங்கிலாந்து தொடக்க வீரராக ஹசீத் ஹமீத் களமிறங்கினார். அப்போது அவர், 'கார்டு' ( Guard) எடுத்துக்கொண்ட விதம் தான் கோலியை கடுப்பாக்கியுள்ளது. ஏனெனில், அவர் ஸ்டம்புகளுக்கு நீண்ட தூரத்தில் கார்டு எடுத்தார்.  

பேட்ஸ்மேன்கள் களத்திற்குள் வரும்போது முதலில் ஸ்டம்புகளுக்கு அருகாமையில் கார்டு எடுத்துக்கொள்வார்கள். அதாவது காலை வைத்து பிட்ச்-ல் கோடு போட்டுக்கொள்வார்கள். அவர்கள் ஸ்டம்புகளில் இருந்து 5 அடிக்குள்ளாக தான் போட வேண்டும் என்பது தான் ரூல்ஸ். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஹசீப் நீண்ட தூரத்தில் போட்டார். இதனை பார்த்த கோலி கடும் கோபம் அடைந்தார்.  

அதைத் தொடர்ந்து, நேரடியாக நடுவர்களிடம் சென்று ஹசீப்பின் தவறான செயல் குறித்து முறையிட்டார். அதனை நடுவர்கள் விசாரிக்க சிறிது நேரம் கோலி - நடுவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏனெனில், இந்திய அணி பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பண்ட்-க்கும் இதே விதிமுறையை கூறி நடுவர்கள் எச்சரித்தனர். இதுதான் கோலியின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

எனினும், ஹசீப்பின் ஆட்டத்தை பும்ரா நீண்ட நேரம் நீடிக்க விடவில்லை. 12 பந்துகளை சந்தித்த அவர் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால், இந்தியா நிம்மதி பெருமூச்சு விட்டது. அதுமட்டுமின்றி, டாப் ஆர்டரில் 3 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால், அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.

 

 

 

மற்ற செய்திகள்