VIDEO: ‘அப்படியே தோனி ஸ்டைல்’.. அசால்ட்டா அவுட்டாக்க பார்த்த இலங்கை வீரர்.. ஜஸ்ட் மிஸ்ஸில் ‘எஸ்கேப்’ ஆன நிதிஷ் ராணா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் தோனி மாதிரி அவுட் செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: ‘அப்படியே தோனி ஸ்டைல்’.. அசால்ட்டா அவுட்டாக்க பார்த்த இலங்கை வீரர்.. ஜஸ்ட் மிஸ்ஸில் ‘எஸ்கேப்’ ஆன நிதிஷ் ராணா..!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களும், தேவ்தத் படிக்கல் 29 ரன்களும் எடுத்தனர்.

Hasaranga imitates MS Dhoni hitting blindly at stumps

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதில் அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 40 ரன்களும், மினோட் பானுகா 36 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார், சேத்தன் சக்காரியா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Hasaranga imitates MS Dhoni hitting blindly at stumps

இந்த நிலையில் இப்போட்டியில் இலங்கை பவுலர் ஒருவர் தோனி போல் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியின் 19-வது ஓவரை இலங்கை வீரர் வாணிந்து ஹசரங்கா வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார், பவுண்டரி அடிக்க முயன்றார். ஆனால் பேட்டில் பந்து சரியாக படாததால், ஃபீல்டரின் கைக்கு சென்றது.

அதனால் உடனே இரண்டாவது ரன்னுக்கு புவனேஷ்வர் குமார் ஓடினார். அப்போது நான் ஸ்ட்ரைக்கர் என்ட்டை நோக்கி நிதிஷ் ராணா வேகமாக ஓடி வந்தார். அந்த சமயம் ஹசரங்காவின் கைக்கு பந்து வந்ததும், தோனி போல் திரும்பாமல் அவுட் செய்ய முயன்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்