"SRH அணி ஏலத்தில் எடுத்ததும்".. கண்ணீர் விட்ட பிரபல வீரரின் தாய்.. மனம் உருக வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இப்படி ஐபிஎல் மினி ஏலத்தில் பல முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் சதமடித்து அசத்தி இருந்தார். அதிலும் ஒரு போட்டியில், 116 பந்துகளில் அதிரடியாக ஆடி 153 ரன்கள் சேர்த்திருந்தார்.
அதே போல, டி 20 போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹேரி ப்ரூக் ஐபிஎல் மினி ஏலத்திலும் இடம் பெற்றிருந்தார். அப்படி இருக்கையில், யாரும் எதிர்பாராத வகையில், 13.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் பலரையும் வியக்க வைத்துள்ளார் ஹேரி ப்ரூக்.
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனது பற்றி பேசி இருந்த ஹேரி ப்ரூக், "இத்தனை பெரிய தொகைக்கு ஏலம் போனதை அறிந்து பேச வார்த்தைகள் இல்லாமல் போனேன். நான் எனது தாய் மற்றும் பாட்டியுடன் உட்கார்ந்து டின்னர் சாப்பிட்டு கொண்டிருந்த போது தான் ஏலத்தில் என்னை SRH எடுத்தார்கள். அப்போது இதனை அறிந்து எனது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் அழ தொடங்கி விட்டனர்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்