"மொத்தமா, 7 'ball' தான்.. மேட்ச் தலைகீழா மாறிடுச்சு.." 'ஆர்சிபி'யின் கனவை தனியாளாக காலி செய்த 'இளம்' வீரர்!!.. "இந்த 'ட்விஸ்ட்'ட யாருமே எதிர்பார்க்கல போல!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனில், முதலில் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய பெங்களூர் அணி, சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது போட்டியில், முதல் தோல்வியை பதிவு செய்தது.

"மொத்தமா, 7 'ball' தான்.. மேட்ச் தலைகீழா மாறிடுச்சு.." 'ஆர்சிபி'யின் கனவை தனியாளாக காலி செய்த 'இளம்' வீரர்!!.. "இந்த 'ட்விஸ்ட்'ட யாருமே எதிர்பார்க்கல போல!!"

இதனைத் தொடர்ந்து, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய பெங்களூர் அணி, இன்று பஞ்சாப் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

harpreet brar tooks 3 main wickets of rcb leads punjab to win

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், 7 ரன்களில் அவுட்டானார். இதன் பிறகு, சற்று பொறுமையுடன் பெங்களூர் அணி ரன் எடுத்த நிலையில், பஞ்சாப் அணியின் இளம் வீரர் ஹர்ப்ரீத் பிரர் (Harpreet Brar), தனியாளாக பெங்களூர் அணியின் வெற்றிக் கனவை சிதைத்தார். கோலியின் விக்கெட்டை முதலில் காலி செய்த ஹர்ப்ரீத், அதன் அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல்லை ரன் எதுவும் எடுக்காமல், க்ளீன் போல்டு ஆக்கினார்.

harpreet brar tooks 3 main wickets of rcb leads punjab to win

அதன் பிறகு, தான் வீசிய அடுத்த ஓவரிலேயே, பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸையும் ஹர்ப்ரீத் அவுட்டாக்கினார். பெங்களூர் அணியின் மூன்று அதிரடி வீரர்களையும் அடுத்தடுத்த ஓவர்களில், ஹர்ப்ரீத் காலி செய்ய, இதன் பிறகு, பெங்களூர் அணியால் மீளவே முடியவில்லை. கடைசியில், அந்த அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

harpreet brar tooks 3 main wickets of rcb leads punjab to win

பெங்களூர் அணி எத்தனை கடின இலக்கை நோக்க்கி ஆடினாலும், போட்டியை தங்களது பக்கம் திருப்பக் கூடிய ஆற்றலுள்ள வீரர்களான கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர், பெங்களூர் அணியில் இருந்த போதும், அவர்கள் அனைவரின் விக்கெட்டுகளை தான் வீசிய 7 பந்துகளில், அடுத்தடுத்து சாய்த்து அசத்தினார் ஹர்ப்ரீத்.

harpreet brar tooks 3 main wickets of rcb leads punjab to win

ஐபிஎல் தொடரில், தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல இளம் வீரர்கள் முத்திரை பதித்து வரும் நிலையில், இன்றைய போட்டியின் திருப்பு முனையாக அமைந்த ஹர்ப்ரீத் பிராருக்கும், ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்