‘பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு’.. வெளியான பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெண்கள் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்தற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

‘பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு’.. வெளியான பரபரப்பு தீர்ப்பு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவாக பேசியதற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டது. இதனை அடுத்து, தனது தவறுக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். ஆனாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில் இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.

இதனை அடுத்து முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதில், ராணுவத்தில் உயிர் நீத்த குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வீதம் என 10 குடும்பங்களுக்கு 10 லட்சமும், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் குழுவிற்கு 10 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

BCCI, ICC, KLRAHUL, HARDIKPANDYA