அப்பா ஆகிட்டேன்! ஹேப்பி நியூஸ் சொன்ன கையோடு... குழந்தையின் 'புகைப்படம்' பகிர்ந்த இளம்வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம்வீரரும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தன்னுடைய காதலி நடாஷா ஸ்டான்கோவிச்சை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் 3.45 மணியளவில் தான் ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார். குழந்தையின் புகைப்படத்தையும் ஹர்திக் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்