VIDEO: 'அண்ணன்... தம்பி... பாசம் எல்லாம் அப்புறம் தான்'!.. 'ஜிம்மில் நேருக்கு நேர் மோதிப்பார்த்த பாண்டியா பிரதர்ஸ்'!.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள பாண்டியா சகோதரர்கள் கடும் உடற்பயிற்சி சவால்களை செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: 'அண்ணன்... தம்பி... பாசம் எல்லாம் அப்புறம் தான்'!.. 'ஜிம்மில் நேருக்கு நேர் மோதிப்பார்த்த பாண்டியா பிரதர்ஸ்'!.. வைரல் வீடியோ!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய 'ஏ' அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக கடந்த 28ம் தேதியே கொழும்புவிற்கு சென்றடைந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த போட்டிகள் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்திய வீரர்கள் தற்போது ஹோட்டல் அறைகளில் சிறிது ஓய்வெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாண்டியா சகோதரர்கள் இணைந்து செய்துள்ள உடற்பயிற்சி சேலஞ்ச் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சியில் முதல் சுற்றாக நடைபெற்ற wall Squat hold சேலஞ்சில் க்ருணால் பாண்டியா வெற்றி பெற்றார். ஹர்திக் நீண்ட நேரம் தாக்கு பிடித்தும் தன் சகோதரரை வெல்ல முடியவில்லை. 

இதன்பிறகு மோதிய Glute Bridge சேலஞ்சில் ஹர்திக் பாண்டியா சிறிது நேரத்திலேயே வெற்றி பெற்று போட்டியை சமன் செய்தார். பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க 3வது சுற்று போட்டியாக Split Squat hold சேலஞ்ச் நடைபெற்றது. இதில் இருவருமே நீண்ட நேரமாக தாக்குப்பிடித்து நின்றதால் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இறுதியில் இருவருமே சமரசமாக ஒன்றாக சேர்ந்து எழுந்தனர். அவர்கள் வேண்டுமென்றே சேலஞ்சை சமனாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவின் கடந்த சில தொடர்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு சரிவர வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அவரின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. க்ருணால் பாண்டியாவை பொறுத்தவரை கடந்த இங்கிலாந்து தொடரில் தான் அறிமுகமானார். எனவே, இருவரும் இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டால் தான் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

மற்ற செய்திகள்