தமிழில் பேசிய ஹர்திக் பாண்டியா.. "அட, என்ன சொல்றாரு பாருங்க".. பட்டையை கிளப்பும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது இந்திய அணி.

தமிழில் பேசிய ஹர்திக் பாண்டியா.. "அட, என்ன சொல்றாரு பாருங்க".. பட்டையை கிளப்பும் வீடியோ!!

Also Read | கவாஸ்கர், ரவி சாஸ்திரி பலரும் இங்க சாப்ட்டு தான் மேட்ச் ஆட போவாங்களாம்.. வைரலாகும் ஆஸ்திரேலிய தமிழ் 'தம்பதி'!!

கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருஇந்தது. அந்த போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

அது மட்டுமில்லாமல், லீக் சுற்றுடன் வெளியேறி இந்திய அணி அதிர்ச்சி அளித்திருந்தது. இதன் காரணமாக, இந்த முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி 20 உலக கோப்பை தொடரில் மோத போகிறது என அறிவிக்கப்பட்டது முதலே இரு நாட்டு ரசிகர்களும் உச்சகட்ட ஆவலில் காத்திருந்தார்கள்.

Hardik pandya speaks in tamil fans reacts video viral

அதனை நிறைவேற்றும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய உலக கோப்பை போட்டி அமைந்திருந்தது. 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. ஆனால், கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். இக்கட்டான சூழலில் சிக்ஸர்களை கோலி பறக்க விட, கடைசி பந்தல் அஸ்வின் உதவியுடன் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

Hardik pandya speaks in tamil fans reacts video viral

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் ஒன்று என்றும் இதனை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், கோலி ஃபார்மையும் பலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தமிழில் பேசியது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Hardik pandya speaks in tamil fans reacts video viral

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீகாந்த் மற்றும் தொகுப்பாளினி பாவனா ஆகியோர் மைதானத்தில் இருந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் பேசினர். அப்போது தமிழில் பேசிய ஹர்திக் பாண்டியா, "கலக்குறே மச்சான்" எனக்கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து, கோலியுடனான தனது பார்ட்னர்ஷிப் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா, தமிழில் பேசியது தொடர்பான வீடியோக்கள், தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

Also Read | தீபாவளிக்கு ஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்ய முயன்ற பெண்.. "கொஞ்ச நேரத்துல 2.5 லட்ச ரூபாய காணோம்".. அரண்டு போய்ட்டாங்க..

CRICKET, HARDIK PANDYA, HARDIK PANDYA SPEAKS IN TAMIL, ஹர்திக் பாண்டியா

மற்ற செய்திகள்