"வா பாட்டி, நாமளும் புஷ்பா ஸ்டெப் போட்டு வைரல் ஆவோம்.." கோதாவில் இறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு பல பிரபலங்கள் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும் இணைந்துள்ளார்.

"வா பாட்டி, நாமளும் புஷ்பா ஸ்டெப் போட்டு வைரல் ஆவோம்.." கோதாவில் இறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியருந்த புஷ்பா திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அதிலும் குறிப்பாக, புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

வைரல் புஷ்பா

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், என எதை திறந்தாலும், புஷ்பா படம் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக தென்படுகிறது. அந்த அளவுக்கு பிரபலங்கள் வரை, புஷ்பா பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒரு வழி பண்ணியுள்ளது. இந்திய அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர், அல்லு அர்ஜுன் நடனம் மற்றும் வசனங்கள் பேசும் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

கிரிக்கெட் வீரர்கள்

அதே போல, ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் கூட, ஸ்ரீவள்ளி பாடலுக்கு, வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், தன்னுடைய மகள்களை வைத்து, 'சாமி சாமி' என்ற புஷ்பா படத்தின் பாடலுக்கும் நடனமாட வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மைதானத்தில் 'ஸ்ரீவள்ளி'

வார்னருக்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ, புஷ்பா பாடலுக்கு ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில், விக்கெட் எடுத்த உடன், மைதானத்தில் கூட புஷ்பா ஸ்டெப்பை ஆடிக் காட்டினார்.

சர்வதேச லெவலுக்கு 'ஸ்ரீவள்ளி' ஹிட்டடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு இந்திய வீரர், சற்று வித்தியாசமாக இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாட்டியுடன் டான்ஸ்

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். கடந்த சில தொடர்களில், காயம் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியுடன் இணைந்து, 'ஸ்ரீவள்ளி' பாடலுக்கு நடனமாடியுள்ளார். அது மட்டுமில்லாமல், இறுதியில் பாட்டியுடன் புஷ்பா அல்லு அர்ஜுன் தாடியை வருடும் காட்சியையும் சேர்ந்து செய்கிறார்.

 

வாத்தி கம்மிங்

மற்ற கிரிக்கெட் வீர்ரகளின் வீடியோவைப் போல, தற்போது இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் 'வாத்தி கம்மிங்' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்த பாடலில் நடிகர் விஜய் கையை இறக்கி ஆடும் நடன அசைவும், சர்வதேச அளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

HARDIKPANDYA, PUSHPA, ALLU ARJUN, SRIVALLI, ஹர்திக் பாண்டியா, அல்லு அர்ஜுன், ஸ்ரீவள்ளி, புஷ்பா

மற்ற செய்திகள்