#WATCH #VIDEO: ‘வெறித்தனமான ஆட்டத்தால்’... 37 பந்துகளில் செஞ்சுரி’... ‘சிக்சர்களாக விளாசித் தள்ளி'... ‘அதிரடி காட்டிய இளம் ஆல் ரவுண்டர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா அதிரடியான ஆட்டத்தால் 37 பந்துகளில் சதம் அடித்து திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இந்திய அணியின் வளரும் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான 26 வயது ஹர்திக் பாண்ட்யா முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 மாதங்களாக விளையாடவில்லை. இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், ஓய்வு எடுத்துவந்த நிலையில் ஐபிஎல் போட்டி நெருங்குவதால் அவர் விளையாடுவாரா, மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், டிஒய் பாட்டில் டி20 தொடரில் சிஏஜி அணிக்கு எதிரானப்போட்டியில், ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, காட்டடி அடித்து தனது உடற் தகுதியை நிரூபித்துள்ளார்.
39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து எதிரணியை தெறிக்கவிட்டுள்ளார் ஹர்திக் பாண்ட்யா. இதன்மூலம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தேர்வாகலாம் என்று கூறப்படும்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில், ஐ.பி.எல்.லில் ஹர்திக் பாண்ட்யா விளையாடுவது உறுதியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
37 ball 💯 For @hardikpandya7 #DYPATILT20
🔥🔥🔥
7 fours And 10 Sixes #HardikPandya pic.twitter.com/nWSAugNVHa
— Sharique (@Jerseyno93) March 3, 2020
37 ball Hundred For Hardik Pandya 🔥 #DYPATILT20
What A Way To Bring Up His Century.
7 fours And 10 Sixes
Only 8 Dot Balls In His Innings.
Kung Fu Pandya Rocks #HardikPandya pic.twitter.com/rpwNTvTJoq
— Sujoy (@SujoyBarg07) March 3, 2020