"இப்டி ஒரு 'கம்பேக்' இன்னிங்ஸ் காட்டுறவனுக்கு 'லைஃப்டைம்' settlement டா..." 'வாண'வேடிக்கை காட்டிய ஹர்திக் 'பாண்டியா'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

"இப்டி ஒரு 'கம்பேக்' இன்னிங்ஸ் காட்டுறவனுக்கு 'லைஃப்டைம்' settlement டா..." 'வாண'வேடிக்கை காட்டிய ஹர்திக் 'பாண்டியா'!!!

மிகக் குறைந்த ரன்களே இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிக்ஸர் மழையை பொழிந்தார். 17 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 138 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. ஆனால், கடைசி 3 ஓவர்களில் 57 ரன்கள் குவித்த நிலையில் அணியின் ஸ்கோர் 195 ஆக உயர்ந்தது. இதில், 19 ஆவது ஓவரை வீசிய ஆர்ச்சர் 3 ரன்கள் மட்டும் கொடுத்தார். 18 மற்றும் 20 ஆவது ஓவர்களில் ஹர்திக் பாண்டியா, 7 சிக்ஸர்களை பறக்க விட, அந்த 2 ஓவர்களில் தலா 27 ரன்கள் என மொத்தம் 54 ரன்கள் குவித்தது.Hardik pandya outstanding innings mumbai to score huge runs

இந்த சீசனில் பெரிய அளவில் பார்மில் இல்லாமல் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, இன்றைய ஆட்டத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார். 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் ஹர்திக் பாண்டியா 60 ரன்கள் குவித்தார்.

 

 

மற்ற செய்திகள்