India Vs Pakistan: ஹர்திக் பாண்டியாவின் அசால்ட் சம்பவம்.. மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி போட்ட பதிவு.. பக்காவா பொருந்துதே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் உடனான போட்டியின் இறுதி ஓவரில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் இதனை குறிப்பிட்டு பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.

India Vs Pakistan: ஹர்திக் பாண்டியாவின் அசால்ட் சம்பவம்.. மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி போட்ட பதிவு.. பக்காவா பொருந்துதே..!

Also Read | "சில சமயங்கள்ல நாமும் இந்தமாதிரி முடிவை எடுக்கணும்".. தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் மூலமாக ஆனந்த் மஹிந்திரா சொன்ன மேசேஜ்.. !

இந்தியா - பாகிஸ்தான்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் துவங்கியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம்கண்டன. பொதுவாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் உலக அளவில் பரபரப்பை கிளப்புவது உண்டு. நேற்றைய போட்டியும் அப்படித்தான் அமைந்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீசுவதாக அறிவித்தார்.

Hardik Pandya nod to DK Smriti Irani reaction goes viral

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி பவுலர்களின் அட்டகாசமான பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் மட்டும் தாக்குபிடித்து 42 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாண்டியா காட்டிய அதிரடி

இதனை தொடர்ந்து சேசிங் செய்ய களமிறங்கிய இந்திய ஒப்பனர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். ராகுல் ரன் எடுக்காமல் வெளியேற, கேப்டன் ரோஹித் சர்மா 12 ரங்களிலும், சூரியகுமார் யாதவ் 18 ரங்களுடன் வெளியேற ஆட்டம் யார் பக்கம்? என்ற கேள்வி எழுந்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா (35) அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் பரபரப்பின் உச்சிக்கே சென்றனர். இதனை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை பாண்டியாவிடம் கொடுத்தார் கார்த்திக். 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் அடுத்து வீசப்பட்ட பந்தில் பாண்டியாவால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. அப்போது எதிர் முனையில் நின்றிருந்த கார்த்திக்கை பார்த்து பார்த்துக்கலாம் என்ற தொனியில் பாண்டியா ரியாக்ஷன் செய்தார். சொன்னதுபோலவே அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசி மேட்சை முடித்துவைத்தார்  பாண்டியா. நேற்றைய போட்டியில் 17 பந்துகளை மட்டுமே சந்தித்த பாண்டியா 33 ரன்களை விளாசியிருந்தார்.

Hardik Pandya nod to DK Smriti Irani reaction goes viral

மத்திய அமைச்சர்

இந்நிலையில், கடைசி ஓவரில் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி,"அவர்கள்  இன்று திங்கட்கிழமை என்று கூறும்போது" என மீம் பாணியில் பதிவு செய்ய இந்த போஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | இந்தமாறி நேரத்துல வீரனுங்கல்லாம் என்ன செய்வாங்க தெரியுமா..? சிக்ஸ்க்கு முன்னாடி பாண்டியா கொடுத்த ரியாக்ஷன்..தெறி வீடியோ..!

CRICKET, HARDIK PANDYA, SMRITI IRANI, ASIA CUP 2022, IND VS PAK

மற்ற செய்திகள்