Video: நான் 'திரும்ப' வந்துட்டேன்னு சொல்லு... சிக்ஸர்களை 'பறக்க' விட்டு... தெறிக்க விட்ட 'முன்னணி' வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுமார் 5 மாதங்களாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா மீண்டும் களத்திற்கு திரும்பியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20 தொடரில் ரிலையன்ஸ் அணி சார்பாக ஹர்திக் பாண்டியா களமிறங்கி விளையாடினார். பேட்டிங்கில் அதிரடி காட்டிய இவர் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உட்பட 38 ரன்கள் குவித்தார். தொடர்ந்து பந்துவீச்சிலும் அசத்திய இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Here is the video of Hardik Pandya's 2 back to back sixes in #DYPATILT20
Here is the link of live stream https://t.co/TN04OKdAAU https://t.co/eGMS4MW1kP pic.twitter.com/laC5n4BmRT
— Sujoy (@SujoyBarg07) February 28, 2020
ஹர்திக் பாண்டியாவின் இந்த அதிரடி ஆட்டத்தால் ரிலையன்ஸ் அணி, பாங்க் ஆஃப் பரோடா அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் விரைவில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் வந்துட்டேன்னு சொல்லு!