கங்குலி கொடுத்த அட்வைஸ்.. புறக்கணித்த ஹர்திக் பாண்டியா.. "ஒரு முடிவோட தான் இருக்காரு போல".. இந்திய அணியில் எழுந்த பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கங்குலி பேச்சைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், ஹர்திக் பாண்டியா செய்துள்ள செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கங்குலி கொடுத்த அட்வைஸ்.. புறக்கணித்த ஹர்திக் பாண்டியா.. "ஒரு முடிவோட தான் இருக்காரு போல".. இந்திய அணியில் எழுந்த பரபரப்பு

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா. அதிரடி பேட்டிங், பவுலிங் மற்றும் அசாத்திய ஃபீல்டிங் என அனைத்திலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, முதுகுப் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்படவே, அதன் பிறகு நீண்ட இடைவெளி ஒன்றை எடுத்துக் கொண்டார்.

டி 20 உலக கோப்பை

பின்னர், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த ஹர்திக் பாண்டியா, பந்து வீச முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார். இதன் காரணமாக, ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேன் என்ற போர்வையில் மட்டும் தான் அணியில் இடம் பிடிக்க செய்தனர். கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை போட்டியில் இடம்பிடித்திருந்த ஹர்திக் பாண்டியா, 4 ஓவர்கள் வரை மட்டுமே ஒட்டு மொத்தமாக வீசினார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு

இதனால், ஆல் ரவுண்டர் ஒருவரை பந்து வீசச் செய்யாமல், எதற்கு உலக கோப்பை அணியில் தேர்வு செய்தீர்கள் என பிசிசிஐ தேர்வாளர்களுக்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை.

அகமதாபாத் கேப்டன்

அதே போல, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ள ஹர்திக் பாண்டியா, தன்னுடைய முழு ஃபிட்னெஸை  அடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். மார்ச் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில், புதிதாக உருவாகியுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவுரை சொன்ன கங்குலி

இதனிடையே, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ் பற்றி பேசுகையில், 'காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டி, தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அப்போது தான், அவரால் இந்திய கிரிக்கெட் அணிக்காக நீண்ட காலம் ஆட முடியும். அதே போல, ரஞ்சி தொடரில், அவர் பங்கேற்று அதிக ஓவர்கள் பந்து வீசினால் தான், அவரது உடல் அதிகம் வலிமை அடைந்து, இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்' என கங்குலி அறிவுறுத்தியிருந்தார்.

கேட்காத ஹர்திக்

ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலியின் பேச்சை பொருட்படுத்தாத ஹர்திக் பாண்டியா, நடைபெறவிருக்கும் ரஞ்சி தொடரில், பரோடா அணிக்காக களமிறங்கவில்லை. ரஞ்சி தொடரின் முதல் பாதி, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் பாதி, மே 30 முதல் ஜூன் 26 வரையும் நடைபெறவுள்ளது.

ஆனால், இதில் கலந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் தன்னுடைய  திறனை நிரூபித்து, மீண்டும் இந்திய அணியின் வொயிட் பால் போட்டியில் களமிறங்குவதையே தன்னுடைய இலக்காக வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

HARDIKPANDYA, SOURAVGANGULY, BCCI, IPL 2022, AHMEDABAD TITANS

மற்ற செய்திகள்