‘தோனிகிட்ட இருந்துதான்’... ‘அந்த வித்தைய கத்துருக்காரு’... ‘ஆல் ரவுண்டரை பாராட்டி தள்ளிய சேவாக்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய போட்டியில் தொடர் ஆட்ட நாயகன் விருதுபெற்ற, ஹர்திக் பாண்ட்யா குறித்து முன்னாள் அதிரடி துவக்க வீரர்  வீரேந்திர சேவாக் பாரட்டியுள்ளார்.

‘தோனிகிட்ட இருந்துதான்’... ‘அந்த வித்தைய கத்துருக்காரு’... ‘ஆல் ரவுண்டரை பாராட்டி தள்ளிய சேவாக்’...!!!

காயத்தில் இருந்து உடற்தகுதி தேறினாலும், பவுலிங் செய்யாமல், பேட்டிங்கில் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா கவனம் செலுத்திவருகிறார். இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா சிறப்பான கேம் பினிஷராக மாறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அவரது ஆட்டங்கள் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன. அதற்கு ஏற்றாற்போல கடந்த 5 போட்டிகளில் அவரது ஆட்டம் அமைந்தது. குறிப்பாக கடந்த டி20 தொடரின் 2-வது போட்டியில் 22 பந்துகளுக்கு 40-க்கும் மேல் ரன்களை குவித்த பாண்ட்யா, இறுதி ஓவரில் 2 சிக்ஸ்களையும் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் அவரது ஆட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசியுள்ளார். அதில், ‘ஹர்திக் பாண்ட்யா ஒரு அற்புதமான வீரர். அவர் எம்.எஸ்.தோனியுடன் இணைந்து அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்திருந்ததால், அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டிருப்பார்.

Hardik Pandya has learnt a lot from MS Dhoni : Sehwag

எம்.எஸ். தோனி இருந்தபோது, அவரைச் சுற்றியுள்ள வீரர்கள், ஒரு போட்டி எப்படி முடிவடைகிறது அல்லது இறுதிவரை எப்படி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லுவேன்.

கடைசி மூன்று ஓவர்களில் போட்டியை எடுத்துச் செல்லுமாறு, எம்.எஸ். தோனி தன்னிடம் கூறியதாகவும், இதனால் அதிக ரன்கள் எடுத்து போட்டியை முடிக்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ரவீந்திர ஜடேஜா கூட நான் தோனி குறித்து கூறியதுபோல் கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யாவிடம் நீங்கள் கேட்டால், அவரும் தோனியைப் பற்றி இதேதான் சொல்வார். மேலும் திறமையின் அடிப்படையில், தற்போது உலக கிரிக்கெட்டில், ஹர்திக் பாண்ட்யாவை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை’ என்று ஷேவாக் பாராட்டி குறிப்பிட்டுள்ளார். இன்றையப் போட்டியில், 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனாலும், தொடர் ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

மற்ற செய்திகள்