IPL 2022 : "அதுக்கு தான் நான் 'Waiting'.." தோனியைக் குறிப்பிட்டு ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்.. மல்லுக்கட்ட ரெடி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியிருந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி விடுவித்திருந்தது.

IPL 2022 : "அதுக்கு தான் நான் 'Waiting'.." தோனியைக் குறிப்பிட்டு ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்.. மல்லுக்கட்ட ரெடி..

என்னது ரூ.10 கோடியில் டைனிங் டேபிளா? பூகம்பமாக வெடித்த சர்ச்சை.. தொழிலதிபர் கொடுத்த விளக்கம்..!

தொடர்ந்து, புதிய ஐபிஎல் அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை வாங்கி, அணியின் கேப்டனாகவும் நியமித்திருந்தது.

இடம்பிடிப்பதில் சிக்கல்

முன்னதாக, இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பவுலிங் செய்ய தடுமாறி வருகிறார். ஃபிட்னஸ் விஷயத்திலும் ஹர்திக் பாண்டியா தேறாமல் இருப்பதால், இந்திய அணியில் இடம்பிடிப்பதிலும் சிக்கல் உருவாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியா

ஆல் ரவுண்டர் என்ற பெயரில் பந்து வீசாமல், இந்திய அணியில் சில தொடர்களில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக, ஆல் ரவுண்டர் இடத்தில் சில இந்திய வீரர்கள், தங்களின் இடத்தை நிலை நிறுத்திக் கொண்டு வருகின்றனர்.

hardik pandya exciting for their match against csk in ipl 2022

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன்

இதனால், இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை போட்டியில், ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனிடையே, 15 ஆவது ஐபிஎல் சீசனில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி

ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஜொலித்தால் தான், இந்திய அணியில் தனக்கான வாய்ப்பை, ஹர்திக் பாண்டியாவால் திரும்ப பெற முடியும். இதனால், அவருக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் மிக முக்கியமான ஒன்று. தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா, அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

hardik pandya exciting for their match against csk in ipl 2022

சிஎஸ்கே அணி குறித்த விஷயம்

அப்போது அவரிடம், ஐபிஎல் தொடரில் பந்து வீசுவது பற்றி, செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு அந்த விஷயம் சர்பரைஸ் ஆகவே இருக்கட்டும் என ஹர்திக் பாண்டியா பதிலளித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் போது சிஎஸ்கே அணி குறித்த ஒரு விஷயத்தையும் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டிருந்தார்.

"குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள போட்டிக்காக நான் ஆவலாக காத்திருக்கிறேன். ஏனென்றால், சென்னை அணியில் மஹி பாய் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள், தோனி தலைமையில் ஆட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது கேப்டனாக உருவெடுத்துள்ள ஹர்திக் பாண்டியாவும், சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியின் அணிக்கு எதிராக ஆட ஆவலுடன் இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் முதல் லீக் போட்டி, ஏப்ரல்  மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளை வித்தா கமிஷன்...வாட்சப்பில் வலை.. ஆசையாக முதலீடு செய்த வாலிபருக்கு வந்த சோதனை..!

HARDIK PANDYA, CSK, IPL2022, ஹர்திக் பாண்டியா, ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ்

மற்ற செய்திகள்