‘பேட்டிங் ஃபார்மில் செமையாக இருந்தும்’... ‘டெஸ்ட் போட்டியில் இல்லாத ஆல்ரவுண்டர்’... ‘வெளியான உண்மையான காரணம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்தும், டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க போவது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி பட்டையைக் கிளப்பினார். கிட்டத்தட்ட இந்திய அணி 3 போட்டிகளில் வென்று இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலுமே ஹர்திக் பாண்ட்யா அணிக்காக பெரிதும் உழைத்தார். அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தாலும், அவரால் ஆஸ்திரேலியா தொடரில் பவுலிங் செய்ய முடியவில்லை. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
எனினும் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்ட்யா, டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் தொடரில் அவரது இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விராட் கோலி சூசகமாக தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் ‘ஹர்திக் பாண்ட்யாவால் தற்போது பந்துவீச முடியவில்லை. அவரால் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் அவர் பந்து வீச முடியாத போது அவருக்கு வாய்ப்புகள் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
ஏனெனில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அந்நிய மண்ணில் விளையாடும்போது இத்தனை ஆண்டுகாலம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டையுமே செய்து அணியில் இரண்டு வீரருக்கான வேலையை செய்து கொண்டிருந்தார்.
மேலும் அவர் இருக்கும்போது 5 பந்துவீச்சாளர்கள் அணிக்கு கிடைத்தது. இப்போது அவரால் பந்துவீச முடியாமல் போகும்போது வேறு ஒரு பந்து வீச்சாளர் தான் அணிக்குள் கொண்டுவர முடியும் பேட்டிங்க்கு இந்திய அணியில் எக்கச்சக்க வீரர்கள் இருக்கிறார்கள். இதுகுறித்து நாங்கள் விவாதித்துவிட்டோம்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா பேசுகையில் ‘எப்போது மிகச்சிறப்பாக எனது முழு திறமையையும் எனது பந்து வீச்சில் வெளிப்படுகிறதோ அப்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் வந்துவிடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை பிறந்து 15 நாளில் அவனை விட்டுவந்து 4 மாதமாக ஆகிவிட்டதால்,டெஸ்ட் போட்டியில் பங்குபெறாமல் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இந்தியா திரும்புகிறார்.
மற்ற செய்திகள்