"எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.. உண்மையா என்ன நடந்துதுன்னா.." நீண்ட நாளாக இருந்த குழப்பம்.. போட்டு உடைத்த ஹர்திக்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், சமீபத்தில் சிறப்பாக முடிவடைந்திருந்த நிலையில், புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி இருந்தது.

"எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.. உண்மையா என்ன நடந்துதுன்னா.." நீண்ட நாளாக இருந்த குழப்பம்.. போட்டு உடைத்த ஹர்திக்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது.

இதில், குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே தொடர் வெற்றிகளைக் குவித்து, பலம் வாய்ந்த அணியாக விளங்கி இருந்தது.

சிறந்த கேப்டன்சி

புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்த குஜராத் அணி, இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தொடர் முழுக்க அணியை சிறப்பாக தலைமை தாங்கியதோடு மட்டுமில்லாமல், தேவைப்படும் நேரத்தில் ஆள் ரவுண்டர் திறனையும் வெளிப்படுத்தி இருந்தார்.

Hardik pandya clarified about his absence in indian team

பரவலாக இருந்த கருத்து

ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை, ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில தொடர்களில் வாய்ப்பு கிடைத்தும், ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பேட்டிங் மட்டும் தான் செய்து வந்தார். இதனால், ஐபிஎல் தொடரில் தனது திறனை வெளிப்படுத்தினால் தான், இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இல்லையெனில் அவரது இடம் கேள்விக்குறி ஆகும் என்றும் ஒரு கருத்து பரவலாக இருந்து வந்தது.

மீண்டும் இந்திய அணியில் ஹர்திக்

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங் என மட்டுமில்லாமல், தன்னை ஒரு சிறந்த கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா முன்னிறுத்தி உள்ளார். மேலும், இம்மாதம் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும், ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில், தனது திறனை நிரூபித்து, டி 20 உலக கோப்பைத் தொடரிலும் முக்கிய பங்கை வகிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியில் கம்பேக் குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் வீடியோ ஒன்றை, குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Hardik pandya clarified about his absence in indian team

தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க..

அதில் பேசும் ஹர்திக் பாண்டியா, "இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நான் என்ன செய்தேனோ, அதனை இந்திய அணிக்காகவும் செய்வேன். அதே போல, ரசிகர்கள் நிறைய பேர், நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டேன் என்று தான் நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால், நான் நீக்கப்படவில்லை. நீங்கி இருந்தேன் என்பது தான் உண்மை. நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தவறான கருத்துகள் பரவியது.

நீண்ட நாட்கள் நான் ஓய்வெடுக்க, என்னை அனுமதித்த பிசிசிஐக்கு நன்றி. என்னை மீண்டும் வர வேண்டும் என அவர்கள் வற்புறுத்தவே இல்லை" என தெரிவித்துள்ளார்.

HARDIKPANDYA, ஹர்திக் பாண்டியா, BCCI, GUJARAT TITANS, IND VS SA

மற்ற செய்திகள்