இத்தன நாளா சைலண்டா இருந்தது இதுக்குதானா.. பாண்ட்யா போட்ட ‘மெகா’ ப்ளான்.. இதை நாங்க எதிர்பார்க்கலயே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பையில் விளையாட விரும்புவதை ஹர்திக் பாண்ட்யா மறைமுகமாக கூறியுள்ளார்.
கோலி போன வருச ஐபிஎல் அப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. போட்டுடைத்த பாண்டிங்..!
ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
இரண்டு புதிய அணி
இதில் லக்னோ அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதேபோல் அகமதாபாத் அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியது. அதனால் இந்த முறை கோப்பையை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இப்போதே வீரர்களை தேர்வு செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யா
இந்த நிலையில் உலகக்கோப்பையில் விளையாட விருப்பம் உள்ளதை ஹர்திக் பாண்ட்யா மறைமுகமாக கூறியுள்ளார். அதில், ‘நான் முழுமையான ஆல்ரவுண்டராக தயாராகிவிட்டேன். வரும் ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். எனது பயிற்சிகள், திட்டங்கள் அனைத்தும் உலகக்கோப்பையை மனதில் வைத்து மட்டுமே உள்ளது. என் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்றுத்தர விரும்புகிறேன். அதற்காகதான் இவ்வளவு கடின உழைப்பை போட்டு வருகிறேன். ஐபிஎல் தொடர் எனக்கு சிறந்த பயிற்சியாக இருக்கப்போகிறது’ என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
உலகக்கோப்பையில் இடம்
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்திய அணியில் இடம்பிடிக்க எப்போதும் அவசர அவசரமாக தயாராவேன். ஆனால் இந்த முறை மிகவும் நிதானமாக மனதிற்கு ஓய்வு கொடுத்து, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். பயோ பபுள் வாழ்க்கை மிகவும் கடினமானது. அதெல்லாம் தாண்டி இப்போது முழு மனம் மற்றும் உடல் உறுதியுடன் உள்ளேன். அதனால் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன்’ என ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்