“எப்பவும் நான் உன் பக்கம் தான்.." மகனின் கையை இறுக பிடித்து.. உறுதி கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வைரல் புகைப்படம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஒருவர் தன் மகனோடு இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2022
ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. முன்னர் அறிவித்தபடி ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்கள் அணி மீதான எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றன.
அகமதாபாத் அணியில் ஹர்திக்
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் விடுவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா, கைரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவை ஏலத்துக்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துகொண்டது அகமதாபாத் அணி. அகமதாபாத் அணியின் முதல் வீரராக ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அவர் 15 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவரைத் தொடர்ந்து, 15 கோடி ரூபாய்க்கு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை வாங்கியுள்ள அகமதாபாத் அணி, இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை 8 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை அவர் மிகவும் ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறார்.
மகனுடன் இருக்கும் புகைப்படம்
இந்நிலையில் இன்று ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய மகனோடு கைகோர்த்து நடந்து செல்லும் அவர் கேப்ஷனாக ‘எப்போதும் நான் உன் பக்கம் இருப்பேன்’ என உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
காயமும் ஃபார்ம் அவுட்டும்
இந்திய அணியில் கலக்கிக் கொண்டிருந்த பாண்ட்யா, கடந்த ஆண்டு முதுகுத் தண்டு காயத்தால் அணியில் இருந்து விலகினார். அதனால் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ஆடாமல் இருந்து வந்த அவர் கடந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி, பேட்டிங் மட்டுமே செய்திருந்தார். மிக குறைந்த ஓவர்கள் மட்டுமே அவர் வீசியதால், அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்போது அவர் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த ஐபிஎல் தொடரிலாவது பந்துவீசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மும்பை அணியின் கில்லி இப்ப எங்க Team-ல… மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்
மற்ற செய்திகள்