உங்களுக்கு இங்லீஷ் தெரியாதா?.. 'நடிகைக்கு' செம பதிலடி.. கொடுத்த 'சிஎஸ்கே' வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் ஐ.நா சபையில் பேசியபோது, ''இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். பாகிஸ்தானுக்கும், அதைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும் இந்தியாவுக்கும் இடையே போா் மூண்டால் என்ன நடக்கும்? விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதை மிரட்டலாக நான் கூறவில்லை, முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்,'' என பேசியிருந்தார்.இவரின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்,'' ஐ.நா சபையில் இம்ரான்கான் பேசிய வார்த்தைகள் இரு நாடுகளிடையே பகைமையை வளர்ப்பதாக உள்ளது. ஒரு விளையாட்டு வீரராக அவர் சமாதானத்தை ஊக்குவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்,'' என ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
What do u mean by surly? Oh is it surely ?? 😂😂😂😂 lo ji dekho yeh Angreji Inki.. chill pill next time try and read before u put something in English 👍 https://t.co/dgaTOJplDU
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 8, 2019
இதற்கு வீணா மாலிக்,''பிரதமர் இம்ரான் தனது உரையில் சமாதானத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் காஷ்மீரில் உறுதியாக நிலவ உள்ள சூழல் பற்றியே அவர் குறிப்பிட்டுள்ளார். இது பயமுறுத்தல் இல்லை. அச்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா?,'' என கேட்க, அதற்கு ஹர்பஜன், ''முதலில் எதையும் பதிவு செய்வதற்கு முன் படித்து பாருங்கள்,'' என்று கலாய்த்து உள்ளார்.
வீணா மாலிக்கின் பதிவில் surely என்பதற்கு பதில் surly என தவறுதலாக பதிவிட்டு இருந்தார். இதைத்தான் ஹர்பஜன் சுட்டிக்காட்டி உள்ளார்.