"திரும்ப வந்து ஜெயிக்குறப்போ... அடிக்குற 'அடி' வேற மாதிரி இருக்கும்..." 'தோல்வி'க்கு பின் வைரலான 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கண்டது.
சென்னை அணியின் வாட்சன் மற்றும் ராயுடு சிறப்பாக பேட்டிங் செய்த போது, சென்னை தான் வெற்றி பெறும் என அனைவரும் கருதியிருந்த நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி போட்டியை தங்கள் பக்கம் திருப்பினர். அது மட்டுமில்லாமல், இறுதியில் களமிறங்கிய சென்னை வீரர் ஜாதவ், பல பந்துகளை டாட் செய்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.
இதனையடுத்து, ஜாதவ் மீது கடும் விமர்சனம் உருவான நிலையில் சென்னை அணி மீண்டும் தோல்விக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையின் தோல்வி குறித்து பதிவிட்டுள்ளார்.
'இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் @ChennaiIPL திரும்பி வருவதை @IPL சரித்திரம் பேசும் #KKRvCSK #csk' என குறிப்பிட்டுள்ளார்.
இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் @ChennaiIPL திரும்பி வருவதை @IPL சரித்திரம் பேசும் #KKRvCSK #csk
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 7, 2020
இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி கண்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 போட்டிகளில் அதிகம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
மற்ற செய்திகள்