'நான் கேப்டன் ஆகாம போனதன் பின்னணியே இதான்'.. ஹர்பஜன் சிங்.. BCCI சீக்ரெட்ஸையே மொத்தமாக உடைச்சுட்டாரே மனுஷன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால், எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள ஒரு கருத்து, கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நான் கேப்டன் ஆகாம போனதன் பின்னணியே இதான்'.. ஹர்பஜன் சிங்.. BCCI சீக்ரெட்ஸையே மொத்தமாக உடைச்சுட்டாரே மனுஷன்!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

தன்னுடைய 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வினை அறிவித்த ஹர்பஜன் சிங், 350 சர்வதேச போட்டிகள் வரை விளையாடி, சுமார் 700 விக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 400 விக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளார்.

புறக்கணிப்பு

சர்வதேச போட்டியைப் பொறுத்தவரையில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை, தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் களமிறங்கி வந்தார். இது பற்றி ஓய்வு முடிவை அறிவித்த பிறகு பேசிய ஹர்பஜன் சிங், தனக்கான ஆதரவை யாரும் வழங்கவில்லை.

400 விக்கெட்டுகள் எடுத்த பிறகும், தன்னை வேண்டுமென்ற அணியில் இருந்து சிலர் புறக்கணித்தனர். ஆனால், அதற்கான சரியான விளக்கத்தைக் கூட யாருமே தெரிவிக்கவில்லை என பிசிசிஐ குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

பிசிசிஐ சிபாரிசு வேண்டும்

இந்நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கிடம், 'ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த நீங்கள், ஒரு முறை கூட சர்வதேச அணியின் கேப்டனாக முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளதா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், 'என்னுடைய கேப்டன்சி பற்றி யாரும் பெரிதாக பேசியதில்லை. எனக்கு பிசிசிஐயில் யாரையும் தெரியாது. இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் மாற வேண்டும் என்றால், பிசிசிஐயில் அதிகாரம் உள்ளவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

எனக்கு மகிழ்ச்சி தான்

அப்படி ஒரு சிபாரிசு, உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், கேப்டன் என்னும் மரியாதை உங்களுக்கு கிடைக்காது. என்னிடம் கேப்டன் ஆவதற்கான முழு திறனும் இருந்தது. பல கேப்டன்களுக்கு நானே அறிவுரை வழங்கியுள்ளேன். இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனது பற்றி எனக்கு பெரிய கவலை ஒன்றுமில்லை. ஒரு வீரராக, நாட்டிற்கு சேவை செய்ததை எண்ணி, எப்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என தெரிவித்துள்ளார்.

அதிக கேள்விகள்

கங்குலி, தோனி மற்றும் கோலி என பலரும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறந்த பங்கினை ஆற்றியுள்ள நிலையில், பிசிசிஐயில் சிபாரிசு செய்யும் ஒருவர் இருந்தால் மட்டும் தான், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்க முடியும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக கேள்விகளை உருவாக்கியுள்ளது.

HARBHAJAN SINGH, BCCI, MS DHONI, GANGULY, ஹர்பஜன் சிங், பிசிசிஐ, எம்.எஸ். தோனி

மற்ற செய்திகள்