'இவர் தான் உண்மையான ஹீரோ'...'இத யாரது கவனிச்சீங்களா'?...எவளோ பெரிய 'ரிஸ்க்' எடுத்திருக்காரு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் முடிவுற்ற நிலையில்,சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் நெகிழ செய்துள்ளது.

'இவர் தான் உண்மையான ஹீரோ'...'இத யாரது கவனிச்சீங்களா'?...எவளோ பெரிய 'ரிஸ்க்' எடுத்திருக்காரு!

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை தட்டி சென்றது.மும்பை அணி 4-ஆவது முறையாக கோப்பையை தனதாக்கி கொண்டது.வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் நிச்சயம் சென்னை வெற்றி பெற்று விடும் என பலரும் நினைத்திருந்தார்கள்.அதற்கு காரணம் கடைசி வரை களத்தில் நின்று போராடிய வாட்சன்.

சென்னை அணிக்காக கடைசி வரை போராடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வாட்சன்,கிட்டத்தட்ட போட்டியின் இறுதி வரை சோர்வகமால் போராடினார் என்றே கூறலாம்.ஒருவேளை அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவே மாறி இருக்கலாம். இதனிடையே சென்னை அணியின் வாட்சன் தான் உண்மையான ஹீரோ என அனைவராலும் புகழப்பட்டு வருகிறார்.அதற்கான காரணத்தை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது காலில் அடிபட்டு ரத்தம்வழித்தோடிய நிலையிலும் வாட்சன் பேட்டிங் செய்திருக்கிறார்.போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இதை யாரும் கவனிக்காத நிலையில்,தற்போது அதுகுறித்த புகைப்படம் ஒன்றை ஹர்பஜன் சிங் பதிவிட்ட பின்பு தான் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.வாட்சன் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் காலில் அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்திருக்கிறது.ஆனால் அவர் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் விளையாடி இருக்கிறார்.போட்டிக்கு பின்பு அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

வாட்சன் ரத்தக்கறையுடன் விளையாடிய புகைப்படத்தை பார்த்த பலரும் நெகிழ்ச்சியுடன் அவரை பாராட்டி வருகிறார்கள்.தனது தொழில் மீது கொண்டிருக்கும் பக்திக்கு,இதை விட எடுத்துக்காட்டு ஏதுமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சொதப்பிய வாட்சனுக்கு ஓய்வு அளிக்காமல்,தொடர்ந்து விளையாடுவதற்கு வாய்ப்பளித்த கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் நம்பிக்கை காப்பாற்றும் விதமாக வாட்ஸன் விளையாடி இருக்கிறார் என சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

IPL, IPL2019, CSK, CHENNAI-SUPER-KINGS, MSDHONI, MUMBAI-INDIANS, SHANE WATSON, IPL 2019 FINAL, HARBHAJAN SINGH, MI VS CSK FINAL