“பன்றி'ங்க கூட மோதுனா...!!!” - சர்ச்சையை கிளப்பிய 'ஹர்பஜன்' சிங்-ன் ட்வீட்... தோனி-அம்பையர் விவகாரத்த இவரு விடறதா இல்ல போலயே!!! - “என்ன சார், பிரச்சன...???”
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங் இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னரே தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
சென்னை அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விலகியதைத் தொடர்ந்து, ஹர்பஜன் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகவில்லை என்றும் அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்துக்கும் ஏதோ பிரச்சனை உருவானதால் தான் அவர் அணியில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அவர் சென்னை அணியில் இடம்பெறமாட்டார் என்ற தகவல்களும் வலம் வந்தது.
இந்நிலையில், சமீப காலமாக ஹர்பஜன் சிங் செய்து வரும் ட்வீட்கள், சென்னை அணி மற்றும் சென்னையின் கேப்டன் தோனியை மறைமுகமாக விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'பன்றிகளோடு நாம் மல்யுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால், நம் மீது தான் சேறு படும். அதைத் தான் பன்றிகளும் விரும்பும்' என ட்வீட் செய்துள்ளார்.
I learned a long ago never to Wrestle with a pig....You get dirty, and beside, the pig likes it
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 16, 2020
முன்னதாக, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வைடு பால் அளிக்கச் சென்ற நடுவர் மீது தோனி கோபப்பட்டதாக சர்ச்சை உருவாகி, மிகப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. இந்த வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங், சிரிக்கும் ஸ்மைலிக்களை குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தற்போதும் ஹர்பஜன் சிங் மறைமுகமாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இதில் சிஎஸ்கே அணியை குறிப்பிட்டாரா அல்லது ரசிகர்களை குறிப்பிட்டு ஏதேனும் தெரிவித்தாரா என்பது தான் தற்போது புரியாத புதிராக உள்ளது. இதற்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை கடுமையாக சாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்