'என் அங்காளி, பங்காளி எல்லாருக்கும் நன்றி'... 'நான் சென்னையை விட்டு கிளம்புறேன்'... ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்திய பிரபல வீரரின் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.

'என் அங்காளி, பங்காளி எல்லாருக்கும் நன்றி'... 'நான் சென்னையை விட்டு கிளம்புறேன்'... ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்திய பிரபல வீரரின் ட்வீட்!

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சிறிய அளவில் ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக, அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பது குறித்தும், அணியில் இருந்து எந்தெந்த வீரர்களை நீக்கப் போகிறது என்பது குறித்தும் பிசிசியிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஹர்பஜன் சிங், சென்னை அணியில் இருந்து விலகப் போவது குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. சென்னை அணிக்காக ஆடியது மிகப் பெரிய அனுபவம். அழகான நினைவுகளும், நல்ல நண்பர்களும் எனக்குக் கிடைத்தனர். சென்னை அணியின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்' என குறிப்பிட்டுள்ளார்.

 

2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சென்னை அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்