'ஏன் இந்த ஓரவஞ்சனை'?.. தோனி - கங்குலி பிறந்தநாள் கொண்டாட்டம்!.. ஹர்பஜன் செய்த 'அந்த' காரியம்!.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கங்குலி - தோனி பிறந்தநாளன்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் செய்த காரியம் ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

'ஏன் இந்த ஓரவஞ்சனை'?.. தோனி - கங்குலி பிறந்தநாள் கொண்டாட்டம்!.. ஹர்பஜன் செய்த 'அந்த' காரியம்!.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-ன் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. இவரின் துணிச்சலுக்காகவே இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

நேற்று அவருடைய பிறந்தநாளையொட்டி வீரர்கள் பிசிசிஐ, ஐசிசி என்ற அமைப்புகள் மட்டுமல்லாது வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறிய வாழ்த்துதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணியின் மற்றொரு முக்கிய கேப்டனான எம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்திய அணியின் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஹர்பஜன் சிங் ஒரு வாழ்த்து செய்தியை கூட பதிவிடவில்லை. தோனியின் கேப்டன்சியில் பல்வேறு போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் அவரை மட்டும் எப்படி மறக்க முடிகிறது என ரசிகர்கள் கடும் கோபத்தில் சாடி வருகின்றனர். 

2000ம் ஆண்டில் கங்குலி கேப்டனாக பதவியேற்ற பின்பு சீனியர் வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஜாகீர்கான், எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங், வீரேந்திர் சேவாக் ஆகியோர் கொண்ட அந்த பட்டியலில் ஹர்பஜன் சிங்-ம் முக்கியமானவர். ஹர்பஜனுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் உதவியாக இருந்தவர் கங்குலி. இதன் காரணமாகவே தனது கேப்டன் கங்குலி என்று அவர் வாழ்த்து கூறியுள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளாக தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், அந்த சமயத்தில் தோனி குறித்து அடிக்கடி புகழ்ந்து பதிவுகளை போட்டு வந்தார். ஆனால், இந்த ஐபிஎல்-ல் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால், ஹர்பஜன் சிங் அதிருப்தியில் இருப்பதாகவும், தனது தேவைக்காக மட்டும் வாழ்த்துகளை கூறி வருவதாகவும் தோனியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்