cadaver Mobile Logo Top
Viruman Mobiile Logo top

2011 உலக கோப்பை : தோனி கொடுத்த ஐடியா!!.. அடுத்த ஓவரில் நடந்த மேஜிக்.. ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்!!..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 2011 ஆம் ஆண்டு, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐம்பது ஓவர் உலக கோப்பையை சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வரலாறு படைத்ததை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.

2011 உலக கோப்பை : தோனி கொடுத்த ஐடியா!!.. அடுத்த ஓவரில் நடந்த மேஜிக்.. ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்!!..

இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில், தோனி சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்த தருணத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் பலருக்கும் புல்லரிக்கும்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பற்றி தற்போது சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 260 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மிஸ்பா உல் ஹக் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தனர். இதனால், போட்டியின் முடிவு எப்படி மாறும் என்பதே விறுவிறுப்பாக இருந்தது.

Harbhajan singh about dhoni advice in 2011 WC Finals

அந்த சமயத்தில் தண்ணீர் இடைவேளையின் போது கேப்டன் தோனி தன்னிடம் பகிர்ந்த விஷயத்தினை ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். "அதுவரை நான் 5 ஓவர்கள் வீசி, விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 27 ரன்கள் கொடுத்திருந்தேன். அந்த சமயத்தில் வந்த தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் தோனி ஒரு அறிவுரை கூறினார்.

Around the wicket பகுதியில் நீங்கள் பந்து வீசுங்கள் என என்னிடம் அவர் கூறினார். மிஸ்பா மற்றும் உமர் அக்மல் சிறப்பாக ஆடி கொண்டிருந்ததால், அவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவில்லை என்றால், ஆபத்தாகி விடும் என்ற நிலை இருந்தது. அதன் பின்னர் பந்து வீச வந்த நான், வெற்றிக்காக பிரார்த்தனை செய்து விட்டு பந்து போட்டேன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே நான் Around the wicket பகுதியில் இருந்து வீச, உமர் அக்மல் அவுட்டானார்" என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

Harbhajan singh about dhoni advice in 2011 WC Finals

இதனையடுத்து, அப்ரிடி விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் எடுத்திருந்தார். உமர் அக்மல் மற்றும் மிஸ்பா பார்ட்னர்ஷிப்பை தோனி அறிவுரையின் பெயரில் பந்து வீசி, ஹர்பஜன் சிங் பிரிக்கவே, போட்டி இந்தியாவின் பக்கம் மாறி, வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேற வழி வகுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, HARBHAJAN SINGH, IND VS PAK, 2011 WORLD CUP

மற்ற செய்திகள்