'இது ஆனந்தக் கண்ணீர்னு.. சொல்வாங்களே.. அந்தத் தருணம்'.. உருகும் பாஜி.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் செல்லப் பிள்ளைகளுள் ஒருவரும், தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவருமான ஹர்பஜன் சிங், கடந்த சில மாதங்களாகவே தமிழில் ட்வீட் செய்துவருவது வழக்கம்.

'இது ஆனந்தக் கண்ணீர்னு.. சொல்வாங்களே.. அந்தத் தருணம்'.. உருகும் பாஜி.. என்ன காரணம்?

சந்தோஷமோ, துக்கமோ, விமர்சனமோ, நக்கலோ, நையாண்டியோ எல்லாவற்றையும் தமிழ் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக தமிழிலும் ட்வீட் செய்யும் பழக்கம் கொண்ட ஹர்பஜன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று முன்தினம்  (ஜூலை 03) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் பாஜி என்கிற ஹர்பஜனுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது.

வைரலான அந்த வாழ்த்துச் செய்தி, ‘எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ஹர்பஜன் சிங்’ என்று தொடங்கி, முழுவதும் தமிழிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ஹர்பஜன் சிலம்பம் ஆடுவது, வேட்டிக் கட்டுவது என பல வகையிலும் தமிழ் கலாச்சாரத்துக்கு நெருக்கமாக பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில், தனது பிறந்த நாளில் வாழ்த்து சொன்ன தமிழ் ரசிகர்களுக்கும், தமிழிலேயே நன்றி சொல்லி உருக்கமான ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னுமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்னு எனக்கு தோணுது.இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரணும்.தமிழ் மற்றும் சிஸ்கே ரசிகர்களால் நான்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

CRICKER, HARBHAJANSINGH, TWEET, VIRAL