'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சமீப காலமாகவே இணையத்திலும், கிரிக்கெட் உலகத்திலும் ஆக்டிவாகிவிட்டார்.

'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்!

நடப்பு உலகக்கோப்பையில் கமெண்ட்ரி பண்ணிக்கொண்டிருந்த சச்சின், ஒரு முந்நாள் வீரராக இந்நாள் வீரர்களுக்கு டிப்ஸ் வழங்குவதும், அவர்களின் ஆட்ட முறைகளை விமர்சிப்பதுமான ஆரோக்கியமான தொடர்பிலேயே இருந்து வருகிறார்.  முன்னதாக தோனியின் பேட்டிங் ஸ்டைலை சச்சின் விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தன. ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சச்சின், அடுத்தடுத்த மேட்ச்களில் தோனியின் ஆட்டத்துக்கு, தனது ஆதரவுக்குரல்களையும் அளித்தார். மனதில் தோன்றுவதைக் கூறுபவராகத் திகழும் சச்சின், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார்.

அதில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாடி..  சிறு வயதில் இருந்து உங்களுடன் விளையாண்டிருக்கிறேன். கடந்த 15 நாட்களாக கமெண்ட்ரியும் செய்கிறேன். இது ஒரு அருமையான பயணம். எதிர்வரும் வருடம் சிறப்பான வருடமாக அமையட்டும்’ என்று கூறியுள்ளார்.

SACHINTENDULKAR, BIRTHDAY, TEAMINDIA, CRICKET