எலும்பு முறிவு.. ஒரே கையில் பேட்டிங்.. கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரி.. குவியும் பாராட்டுகள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சிக் கோப்பை தொடரில் ஒரு கையில் காயம் அடைந்த போதிலும் மற்றொரு கையைக் கொண்டே பேட்டிங் ஆடியிருக்கிறார் ஹனுமா விஹாரி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 13 வருஷமா வீட்டுல இருந்த சோஃபா.. எதார்த்தமா பிரிச்சி பார்த்த பெண்.. ஒரு நிமிஷம் அரண்டு போய்ட்டாங்க..!
ரஞ்சிக் கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆந்திரா அணி விளையாடி வருகிறது. இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் இரண்டாவது நாளான நேற்று ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்திருந்தது. இப்போட்டியின் முதல் நாளில் ஹனுமா விஹாரி பேட்டிங் செய்த போது ஆவேஷ் கான் வீசிய வந்து அவருடைய மணிக்கட்டை தாக்கியது.
இதனால் காயமடைந்த விஹாரி ரிடையர்ட் ஹர்ட் முறைப்படி வெளியேறினார். அப்போது அவர் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார். அங்கிருந்து ஸ்கேன் எடுக்க விஹாரி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். வலது கை பேட்ஸ்மேன் ஆன விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்ஸ்மேன் ஆக விளையாடத் தொடங்கினார்.
Images are subject to © copyright to their respective owners.
ஒரே கையில் பந்துவீச்சை எதிர்கொண்ட விஹாரி பவுண்டரி அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் விஹாரி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
Images are subject to © copyright to their respective owners.
கையில் காயம் அடைந்து இருந்த நிலையிலும் அணிக்காக ஒரே கையில் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரியின் இந்த முயற்சியை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனிடையே ஒரு கையில் விஹாரி பேட்டிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Do it for the team. Do it for the bunch.
Never give up!!
Thank you everyone for your wishes. Means a lot!! pic.twitter.com/sFPbHxKpnZ
— Hanuma vihari (@Hanumavihari) February 1, 2023
Also Read | "நூறு வருஷம் வாழணும்னா இதை பண்ணாதீங்க".. 100 வயதை கடந்த பாட்டி கொடுத்த விநோத அட்வைஸ்..!
மற்ற செய்திகள்