சுப்மன் கில் காயத்தால் இளம் வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வாரா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயமடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு மாற்றாக விளையாட உள்ள வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதேபோல் விராட் கோலியும் சில சீனியர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை குற்றம் சாட்டினார். இது மறைமுகமாக ரோஹித் ஷர்மா, புஜாரா ஆகிய இரு வீரர்களைதான் கோலி குறிப்பிட்டார் என சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், இந்த தொடரில் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதனால் அவருக்கு பதிலாக 27 வயதாகும் இளம் வீரர் ஹனுமா விஹாரி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹனுமா விஹாரி, இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 624 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வரும் அவர், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்